நையாண்டி என்றால் கிண்டல் அல்லது கேலி செய்தல் ஆகும். இது கிண்டலும், கேலியும் கொண்ட நாடோடிப் பாட்டையும் குறிக்கும். சில நேரங்களில் சிரிக்க அல்லது நகைக்க வைக்கும் மொழியைக் (வார்த்தையைக்) குறிக்கும்.

சங்க இலக்கியத்தில் வசைப்பாட்டு என்று அழைக்கப்படும் நையாண்டியான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஔவையார், தன்னை நையாண்டி செய்த ஒரு புலவரை வசை பாடிய ஒரு பாடல் பின்வருமாறு:

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,

மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல்

கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,

ஆரையடா சொன்னாயடா!

நாடக இலக்கியத்தில், நையாண்டி உத்தியை முதன் முதலில் கி.மு. 500 களில் ஏதென்ஸ் நாட்டின் அரிஸ்டொபனீஸ் என்பவர் பயன்படுத்தியுள்ளார். இவர் சுமார் 40 நையாண்டி நாடகங்களை நடத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலி&oldid=3415227" இலிருந்து மீள்விக்கப்பட்டது