கேலி (விளையாட்டு)

உரையாடலில் பிறரைக் கேலி செய்து விளையாடுவது கேலி-விளையாட்டு.

நடுவிரலை உள்ளே மடக்கிக் கை காட்டும் பாங்கு
கேலி செய்யும்போது நடுவிரலை ஆட்டுதல்
விரலை ஆட்டிக் காட்டிக் கேலி

ஒரு கையில் நடு விரலை மட்டும் உள்ளே மடக்கிக்கொண்டு ஏனைய இரு கை விரல்களையும் கோத்து இறுக்கமாக மூடிக்கொள்வர். மற்றொருவரை ஒவ்வொன்றாகத் திறக்கச் சொல்வர். திறப்பர் கடைசியாக மடங்கிக் கிடக்கும் நடுவிரலைத் திறக்கும்போது அதனை ஆட்டிக் காட்டி 'உன் பெண்டாட்டி எட்டி எட்டிப் பார்க்கிறாள்' (உன் புருசன் எட்டி எட்டிப் பார்க்கிறான்) என்று சொல்லிக் கேலி செய்வர்.

கூப்பிட்டுக் கேலி

யாருடைய பெயரையும் சொல்லாமல் பொதுச்சொல்லால் பிறரைக் கூப்பிடுவர். யாராவது திரும்பிப் பார்க்கும்போது 'உன்னையா கூப்பிட்டேன், காரைவீட்டுக் கருத்த நாயைக் கூப்பிட்டேன்' என்று சொல்லிக் கேலி செய்வார். சொல்-விளையாட்டுக் கேலி

'இது யாருக்கு வேட்டை' என்பர். விடை சொல்பவர் 'எனக்கு வேட்டை' எனச் சொல்ல எண்ணி அவசரத்தில் 'எனக்கோட்டை' என்பார். அதற்கு மறுமொழியாக 'உன் மாமியார் பல் ஓட்டை' என்று சொல்லிக் கேலி செய்வர்.

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலி_(விளையாட்டு)&oldid=973678" இலிருந்து மீள்விக்கப்பட்டது