கேளிக்கை வரி

கேளிக்கை வரி என்பது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு விதிக்கப்படும் வரியாகும்.

இந்தியாவில் கேளிக்கை வரி தொகு

இந்தியாவில் சினிமா காட்சிகள், பெரிய வர்த்தக நிகழ்வுகள் மற்றும் பெரிய தனியார் விழாக்களும் கேளிக்கை வரி பட்டியலில் உள்ளவையாகும். கேளிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 7வது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் உள்ளது. இது முழுக்க முழுக்க மாநில அரசின் வருவாய் மூலமாகும். தமிழ் படம் மற்றும் மராட்டிய படங்களுக்கு முறையே தமிழ்நாடு மற்றும் மராட்டிய அரசுகளால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேளிக்கை_வரி&oldid=3419252" இருந்து மீள்விக்கப்பட்டது