கே. எல். சிறீமாலி

கே. எல். சிறீமாலி ( Kalu Lal  Shrimali திசம்பர் 1909 - 5 சனவரி 2000) என்பவர் இந்திய நடுவணரசில்  கல்வி அமைச்சராக இருந்தவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கல்வியாளராகவும் இருந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்புகள் தொகு

இராசசுத்தான் மாநிலம் உதய்பூரில் பிறந்த சிறீமாலி பனாரசு பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் , நியுயார்க்கு கொலம்பியா பல்கலைக் கழகம்  ஆகியவற்றில் கல்வி பயின்றார்.

1955 முதல் 1963 வரை நடுவணரசு கல்வி அமைச்சராக இருந்தார். இராசசுத்தான் மாநிலத்திலிருந்து இவர் மாநிலங்கள் அவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இவருடைய கல்வித் துறைப் பங்களிப்புக்காகப் பத்ம விபூசண் விருது  இவருக்கு 1976 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது. சன் சிக்ஸன் என்ற கல்வி மாத இதழின் ஆசிரியராக இருந்து பணியாற்றினார். கல்வி மற்றும் சமூக நலச் சங்கங்களின் செயல்பாடுகளுக்குத் துணையாக  இருந்தார்.

மேற்கோள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2017-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எல்._சிறீமாலி&oldid=3551236" இலிருந்து மீள்விக்கப்பட்டது