கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர்

கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் (K. A. M. Muhammed Abubacker) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கே.எல்.டி. அஹ்மது-டி.ஒ. அஹ்மது ஆய்ஷா ஆகிய தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக 06-09-1971 அன்று பிறந்தார்.

கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர்
தொகுதிகடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு06-09-1971
காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்
அரசியல் கட்சிஇந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

கல்வி தொகு

12ம் வகுப்பு வரை காயல்பட்டினம் முஹிய்யத்தீன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை புதுக்கல்லூரியில் பி.எஸ்.சி.(வேதியியல்) படித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தொகு

முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்த இவர் 1986ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினரானார். 1990ஆம் ஆண்டு சென்னை பெரியமேடு கிளையில் செயலாளர், சென்னையில் மாணவர்களை ஒன்று திரட்டி ‘மாணவர் பேரவை’யை தமிழகத்தில் துவங்கி அதன் மாநில அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1994ஆம் ஆண்டு முஸ்லிம் இளைஞர் லீகின் தேசிய செயல்பாட்டு குழு உறுப்பினர். 2008ஆம் ஆண்டில் மாநில தலைமை நிலைய செயலாளராகவும், 11.07.2009 முதல் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி வருகின்றார். மணிச்சுடர் தமிழ் நாளிதழின் நிர்வாக இயக்குனர் மற்றும் வெளியீட்டாளராக 06.11.2009 முதல் பணியாற்றி வருகின்றார்.

சட்டமன்ற உறுப்பினராக தொகு

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக திராவிட முன்னேற்ற கழக கூட்டனியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு