கே. கண்ணன்
கே. கண்ணன் (K.Kannan) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் எதிர் நாயகனாக நடித்துள்ளார். நகைச்சுவையுடன் கூடிய எதிர் நாயகனாக நடிப்பதில் வல்லவராக இவர் இருந்துள்ளார். இவருடைய உடல் அமைப்பு காரணமாக கவர்ச்சி வில்லன் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.[1]
திரை வாழ்க்கை
தொகுகே. கண்ணனின் சொந்த ஊர் சிவகங்கை ஆகும். திரையரங்கு என்பதில் எம்ஜிஆர் படங்கள் அனைத்தையும் கண்டு அந்த வசனங்களையும் நடிப்பினையும் கூர்ந்து கவனித்து மாலை நேரங்களில் நண்பர்களிடம் எம்ஜிஆரை போல நடித்து காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
எம்ஜிஆரின் மதுரை வீரன் திரைப்படத்தில் முதன்முதலாக எம்ஜிஆர் உடன் சேர்ந்து நடித்தார். மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தில் நடிகை லதாவும் கே கண்ணனும் பேசிய வசனங்கள் ஒரே முயற்சியில் எடுக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் இணைக்கப்பட்ட முதல் காட்சியாக திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.[2]
பொது வாழ்க்கை
தொகுஎம்ஜிஆர் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக தொடக்க காலத்தில் இருந்தே எம்ஜிஆர் ரசிகராக இருந்துள்ளார். இவர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தின் பொருளாளராக பணியாற்றியுள்ளார். இவர் அதிமுக கட்சியின் உறுப்பினராகவும் நட்சத்திர மேடைப் பேச்சாளராகவும் இருந்துள்ளார்.
திரைப்படங்கள்
தொகு- எதிர் நாயகனாக
- உழைக்கும் கரங்கள்,
- உயிரா மானமா,
- நீ,
- சக்தி லீலை,
- கடல் மீன்கள்,
- மீனவ நண்பன்,
- தேடி வந்த லெட்சுமி,
- கியாஸ் லைட் மங்கம்மா,
- ராஜநாகம்,
- இதயக்கனி,
- அருணோதயம்,
- என்ன தான் முடிவு,
- பிராயச்சித்தம்,
- பாக்தாத் திருடன்,
- நல்ல பெண்மணி
- குணச்சித்திர வேடங்களில்
- மங்கையர் திலகம் [1955],
- செங்கமலத்தீவு [1962],
- பணமா பாசமா [1968],
- மாங்குடி மைனர் [1978],
- மக்கள் என் பக்கம் [1987],
- கண் கண்ட தெய்வம் [1967],
- சமயபுரத்தாளே சாட்சி [1983],
- நான் மகான் அல்ல [1984],
- பானை பிடித்தவள் பாக்கியசாலி [1958],
- சங்கே முழங்கு [1972],
- ஞானக்குழந்தை [1979],
- துணிவே தோழன் [1980],
- தனிக்காட்டு ராஜா [1983],
- அக்கா [1974],
- பட்டணத்து ராஜாக்கள் [1982],
- நாளை நமதே [1975],
- நீதியின் மறுபக்கம் [1985]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கவர்ச்சி வில்லன் கண்ணன் மரணம்! Read more at: https://tamil.oneindia.com/news/2005/10/18/kannan.html". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/2005/10/18/kannan.html. பார்த்த நாள்: 18 June 2024.
- ↑ "K.Kannan", Antru Kanda Mugam (in ஆங்கிலம்), 2013-07-30, பார்க்கப்பட்ட நாள் 2024-06-18