கே. கே. சைலஜா

இந்திய அரசியல்வாதி

கே. கே. சைலஜா டீச்சர்  ( நவம்பர் 20, 1956 ல் பிறந்தார்) என்பவர் இந்திய அரசியல்வாதியும், கேரள சுகாதார மற்றும் சமூக நலத்துறை முன்னாள் அமைச்சரும், கூத்துப்பறம்பு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பினராயி விஜயனின் 2016 அமைச்சரவையின் இரண்டு பெண் அமைச்சர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவரின் சொந்த ஊர் கேரளத்தின்ன் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவரின் கணவர் பாஸ்கரன் ஆவார். ஷோபித் மற்றும் லசித் என இரு மகன்கள் இவருக்கு உள்ளனர்.

பொது வாழ்க்கை

தொகு

சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினர். ஜனாதிபத்திய மகிள் குழுவின் மாநில செயலாளர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பினராயி விஜயனின் 2016 அமைச்சரவையில் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். கேரளத்தில் நிபா தீநுண்மி, கொரோனா வைரசு போன்றவைகளினால் உருவான தொற்றை சிறப்பாக கையண்டு செயல்பட்டதற்காக இவர் பலராலும் பாராட்டப்பட்டார். 2021 கேரள சட்டமன்றத் தேர்தல் மட்டனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து கேரள சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கபட்டார். இந்நிலையில் பிரனாய் விஜயனின் 2021 அமைச்சரவையில் இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது பலராலும் விமர்ச்சிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._சைலஜா&oldid=4051206" இலிருந்து மீள்விக்கப்பட்டது