கே. பி. கந்தன்
கே. பி. கந்தன் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம் ஆண்டு நாம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று இவர் சென்னையில் பிறந்தார்.[1] தமிழ்நாட்டைச் சேர்ந்த சோழிங்கநல்லூர் தொகுதியில் இருந்து 14 ஆவது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் எசு. அரவிந்த் ரமேசு இவருடைய தொகுதியில் வெற்றி பெற்றார்.[3] அப்போது ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கக் கூடிய பதவிக்கு எதிரான பின்னடைவைத் தடுக்கும் முயற்சியாக கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநகர சென்னை பகுதியின் பதின்மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் கந்தனும் ஒருவர். புதிய முகங்கள் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் சிறிது தூரத்தை வைக்கும் என்று உணரப்பட்டது.[4]
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தல்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கட்சியின் சார்பாக கந்தன் முன்னிறுத்தப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "AIADMK all set to field new faces". The Hindu. 27 September 2016. http://www.thehindu.com/news/cities/chennai/AIADMK-all-set-to-field-new-faces/article15001027.ece.
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ Kotteswaran, C. S. (5 April 2016). "MLAs in flood-hit areas denied tickets". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/nation/politics/050416/mlas-in-flood-hit-areas-denied-tickets.html.
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.