கே. பி. ராஜேந்திர பிரசாத்

கே. பி. ராஜேந்திர பிரசாத் (K. P. Rajendra Prasad) (இறப்பு: 14 பெப்ரவரி 2020) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரும் ஆவார். 2001 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

கே. பி. ராஜேந்திர பிரசாத் அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 14 பெப்ரவாி 2020 அன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். [2]

மேற்கோள்கள்தொகு