கே. வி. காளியப்பகவுண்டர்
கே.வி.கே ஐயா என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கே.வி.காளிப்பகவுண்டர்[1] அவர்கள் ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டிக்கு அருகிலுள்ள காவிலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோப்பம்பாளையம் ஊரில் தெய்வத்திரு வெங்கடாசலக்கவுண்டர் மற்றும் தாயம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார் கே.வி.காளிப்பகவுண்டர் . இவரை இப்பகுதி மக்கள் கோப்பம்பாளையம் தம்பிக்கவுண்டர் என்று அன்புடன் அழைப்பார்கள். இவர் வேட்டுவக்கவுண்டர் இனத்தை சார்ந்தவர் என்பது கூறிப்பிடத்தக்கது.
கே வி காளியப்பகவுண்டர் | |
---|---|
பிறப்பு | காளியப்பகவுண்டர் சனவரி 25, 1910 கோப்பம்பாளையம்,காவிலிபாளையம் ஊராட்சி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
இறப்பு | ஆகத்து 16, 1970 கோப்பம்பாளையம்,காவிலிபாளையம் ஊராட்சி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. | (அகவை 60)
இருப்பிடம் | காவிலிபாளையம் ஊராட்சி,ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
தேசியம் | இந்தியா. |
சொந்த ஊர் | கோப்பம்பாளையம்,காவிலிபாளையம் ஊராட்சி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
பெற்றோர் | தாயம்மாள் வெங்கடாசலக்கவுண்டர் |
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி
தொகுஇவர் இளமைப்பருவம் முதலே இந்திய தேசத்தின் மீதும் , இந்தியாவின் முன்னேற்றம் என்பது கிராமங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிற காந்தியடிகளின் கருத்தை ஏற்று , இந்திய விடுதலைக்காகவும் ஆங்கிலேயரை விரட்டியடிக்கவேண்டும்ன்று என்ற எண்ணத்தை முழு மூச்சாகக்கொண்டு அருகிலுள்ள கிராம மக்களை ஒன்று திரட்டி விடுதலையின் முக்கியத்துவம் பற்றியும் நாடு பயன்பெறும் விதம்பற்றியும் எடுத்துரைத்தார். நாடு விடுதலையடைந்த பின் , இவர் இந்திய விடுதலைப் போராட்ட தியாகியாக கவுரவிக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் காமராசரின் கல்விப்பணியில் தன்னுடைய முயற்சியையும், செல்வத்தையும் ஈந்து நீங்காத புகழைத் தேடிக் கொண்டவர் திரு.கே.வி.காளிப்பகவுண்டர் ஐயா ஆவார்.
பொதுநலன்
தொகுஇவர் தனது இளமைப்பருவம் தொட்டே பொதுப்பணிகளில் கவனம் செலுத்தியுள்ளார்.ஆழ்ந்த இறைபக்தியும் , சேவை மனப்பான்மையும், ஏழை-எளியவர்பால் மிகுந்த ஈடுபாடு உடையவராயும் திகழ்ந்தார். மனிதர்களே வையத்தில் வாழ்வாங்கு வாழ இயலும். இவ்வழியே தன்னலமற்ற தியகத்தையும், அறவழியைப் பின்பற்றியும் எளிமையாகத் தொண்டாற்றியும் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றவர்.
இந்திய நாட்டு விடுதலைக்காக உழைத்தும், சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் காமராசரின் கல்விப்பணியில் தன்னுடைய முயற்சியையும், செல்வத்தையும் ஈந்து நீங்காத புகழைத் தேடிக் கொண்டவர் திரு. கே.வி.கே ஐயா ஆவார்.
விருந்தோம்பல் பண்பு சமுதாய, பொருளாதார வேறுபாடுகள் இன்றி அனைத்துப் பிரிவு மக்களின் இல்ல நல்விழாக்களிலும் அன்புடன் கலந்து அவர்களின் மனம் நிறைவு பெறுவது கண்டு மகிழும் இயல்பினர்.அவ்வண்ணமே வீடுதேடிச் சென்றவர்களிடம் கணிவுடன் அவர்தம் பிரச்சனையை ஆய்ந்து அதற்கான தீர்வைக் கூறுவதுடன் அவர்களுக்கு விருந்து அளித்தும் தாம் இன்பமுறுவார். பொதுக் காரியங்கள் தொடர்பாக, தனிநபர் சிக்கல்கள் குறித்தும் அண்ணரிடத்துச் சென்றவர்கள் மனநிறைவு பெற்றுத் திரும்புதல் இயல்பாக நடைபெற்று வந்தது.
செயல்திறன்
தொகுஎடுத்துக்கொண்ட பணிகளில் தடைகள் பல வந்துநின்ற போதும் கலங்காது உறுதியான மனப்பாங்குடன் ஒரே குறிக்கோளுடன் நின்று செயல்படுத்திய பெருமகனார் கே.வி.கே ஐயா ஆவார். ஒரு முறை பாதை போடுவதற்காக 16 முறை அந்நிலச் சொந்தக்காரரை அணுகி, பட்டா நிலத்திற்குள் ஒரு மைல் நீளத்தில் புதிய பாதை அமைத்திடச் சம்மதிக்க வைத்தார்.
பவானிசாகர் அணைக்கட்டு கட்டுமானக்குழு
தொகுநாடு விடுதலைக்கு பின் கே.வி.காளிப்பகவுண்டர் ஐயா அவர்கள் இந்திய தேச காங்கிரசில் இணைத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காகவும் கிராமப்புறங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டார். தமிழகத்தில் சுதந்திரத்துக்கு பிறகு ஆட்சியமைத்த இந்திய தேசிய காங்கிரசு அரசு கிராமப்புற நீர்வளத்தை மேம்படுத்தும்விதத்தில் திட்டங்களை வகுத்தனர்.
பவானி நதி நீரைத் தேக்குவதின் மூலம் 2.0 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெரும் என்று ஆலோசனையை திரு.கே.வி.காளிப்பகவுண்டர் ஐயா அவர்கள் முன்நிறுத்தினார். கி.பி 1947 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஓ பி ராமசாமி ரெட்டியார் ஆட்சிக்காலத்தில் கீழ்பவானி திட்டக்குழு உருவாக்கப்பட்டது இக்குழுவில் கே.வி.காளிப்பகவுண்டர் ஐயா அவர்கள் முதன்மைபங்காற்றினார்.
சிறுமுகை வழியாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் பவானிசாகர் அணைக்கட்டுனது கீழ்பவானி திட்டம் மூலம் கட்டப்பட்டுள்ளது. கே.வி.காளிப்பகவுண்டர் ஐயா மற்றும் திட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து வடவள்ளி, பீர்க்கடவு, குய்யனூர், பட்டரமங்கலம் ஆகிய கிராம மக்களை சந்தித்து அணைக்கட்டின் அவசியத்தையும் அதன் மூலம் பயன்பெறும் திட்டத்தையும் மக்களிடத்தில் எடுத்துரைத்து அனைவரையும் சம்மதிக்கவைத்து அவ்விடத்தில் பவானிசாகர் அணைக்கட்டு அமைய வழிவகுத்தார்.
கல்விப்பணி
தொகுநாடு விடுதலைக்குப்பின் காமராசரின் அன்புத்தொண்டராகக் கல்விப் பணியைக் கிராம மக்களுக்கு அளிப்பதில் தீவிரம் காட்டி நிலக்கொடை மற்றும் பொருட்கொடை வழங்கித் தொடக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி வளர்ச்சிக்கு அடிகோலினார். இவர் தனது சொத்துக்களை கல்விக்காக கொடையளித்துள்ளார் அதுமற்றின்றி தனது சேமிப்பு தொகையும் பள்ளி கட்டிடம் கட்ட செலவழித்தார் இதனால் இவரை இப்பகுதியின் கல்வி தந்தை.[2] கே.வி.காளிப்பகவுண்டர் ஐயா என்று எல்லாரலும் அன்புடன் அழைக்கப்படுவார்.
இதனால் அரசு பள்ளிக்கு கே வி கே ஐயாவின் பெயரையே வைத்து பள்ளியில் கே.வி.காளிப்பகவுண்டர் அவரக்ளுக்கு சிலையமைத்து மணிமண்டபம் அமைத்துள்ளனர்.[3]
பொதுப்பதவிகள்
தொகுகே.வி.காளிப்பகவுண்டர் ஐயா பல்வேறு பொதுப்பணி சேவைகளை வகித்து மக்களுக்கு நற்பணிகளை செய்துவந்தார் அவைகள் பின்வருமாறு:
- கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் 1944 முதல் 1960 வரை
- கோபி நிலவள வங்கி இயக்குனர் 1946 முதல் 1961 வரை
- மாவட்ட வளர்ச்சிக்குழு உறுப்பினர் 1947 முதல் 1961 வரை
- கே.வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடக்குழுத் தலைவர் 1953 முதல் 1970 வரை
- நம்பியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் காவிலிபாளையம் ஊராட்சித் தலைவர் 1961 முதல் 1970 வரை
நன்கொடைகள்
தொகுகே.வி.காளிப்பகவுண்டர் [4] ஐயா தன் வாழ்நாளில் சுற்றுவட்டார கிராமங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார் அனைத்து பாமர மக்களும் கல்வி கற்கவேண்டும் என்று எண்ணிய அவர் தன் சொத்துக்களை கல்விப்பணிக்காக அர்ப்பணித்தார்.
அவர் செய்திட்ட கொடைகள் பின்வருமாறு :
- கே.வி.கே. அரசு மேனிலைப்பள்ளிக்கு இடம் : 4.32 ஏக்கர்.[5]
- கே.வி.கே. அரசு மேனிலைப்பள்ளிக்குக் கட்டடம் கட்ட : ரூ. 2.5 இலட்சம்.
- காவிலிபாளையம் அரசுயர்பள்ளிக்கு இடம் : 4.50 ஏக்கர்.
- காவிலிபாளையம் அரசுயர்பள்ளிக்குக் கட்டடம் கட்ட : ஒரு இலட்சம்.
- கோப்பம்பாளையம் தொடக்கப்பள்ளிக்கு இடம் : 40 சென்ட்.
- அரிஜன் காலனி அமைக்க இடம் : 1 ஏர்க்கர் நிலம்
குறிப்புகள்
தொகு- ↑ "கல்வித்தந்தை கே வி காளிப்பகவுண்டர்" இம் மூலத்தில் இருந்து மார்ச் 18, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120318135030/http://vettuvagounder.org/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D. பார்த்த நாள்: Apr 9, 2010.
- ↑ "விடியல் மாணவர் விருதுகள் ஶ்ரீதேனு சில்க்ஸ் முதல்வன் விருதுகள்,அம்மா மெட்ரிக் கலைமகள் விருதுகள்,கே.வி. காளியப்ப கவுண்டர் சாதனை விருதுகள்". http://consumerandroad.blogspot.in/2015/07/best-social-activist-award-2015.html?m=1. பார்த்த நாள்: July 12, 2015.
- ↑ "K.V.K Govt Boys Higher Sec School Puliampatti". http://www.veethi.com/schools-in-india/k-v-k-government-boys-higher-sec-school-detail-187345.htm.
- ↑ "பள்ளிக்கு நிலம் வழங்கிய கே.வி.கே., பிறந்தநாள் விழா". http://m.dinamalar.com/detail.php?id=1443503. பார்த்த நாள்: January 28, 2016.
- ↑ "K.V.K Govt Boys Higher Sec School Puliampatti". http://wikimapia.org/20194240/KOPPAMPALAYAM-Erode-Dt. பார்த்த நாள்: 2011.