கைபர் பக்துன்வாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்

கைபர் பக்துன்வா மாகாணத்தில் தீவிரவாத தாக்குதல்கள், பாக்கித்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் தெக்ரிக் -இ-தாலிபான், அல் காயிதா, லஷ்கர்-இ-இஸ்லாம்[4] மற்றும் தெகரிக்கு-இ-நபாஸ்-இ- சரியத்-இ-முகம்மதி (Tehreek-e-Nafaz-e-Shariat-e-Mohammadi (TNSM) போன்ற இசுலாமிய தீவிரவாத அமைப்பினர், பாகிஸ்தான் அரசு மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக நடத்தும் ஆயுதத் தாக்குதல்களைக் குறிக்கிறது.

கைபர் பக்துன்வாவில் தீவிரவாத தாக்குதல்கள்
தீவிரவாதத்திற்கான போர் பகுதி

நீல நிறத்தில் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் மற்றும் பச்சை நிறத்தில் கைபர் பக்துன்வா மாகாணம் .
நாள் (20 ஆண்டு-கள், 6 மாதம்-கள், 3 வாரம்-கள் and 4 நாள்-கள்)
இடம் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
முடிவு நடப்பில் [1]
நிலப்பகுதி
மாற்றங்கள்
நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள், கைபர் பக்துன்வா மாகாணம்[2][3]
பிரிவினர்
பாகிஸ்தான் இராணுவம் ஜிகாதிகள்

2004ஆம் ஆண்டிலிருந்து அல் காயிதா தீவிரவாதிகளுக்கு எதிராக பாக்கித்தான் இராணுவம் தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியது முதல் இக்கிளர்ச்சிகள் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடந்து வருகிறது..

ஆப்கானத்திலிருந்து கைபர் பக்துன்வா மாகாணததிற்கு எதிராக வரும் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த, 2017ல் பாகிஸ்தான் தலைமைப் படைத்தலைவர் பாஜ்வா ஆப்கானித்தான்-பாகிஸ்தான் இடையே 2600 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் கம்பி வேலி அமைத்து, 1000 காவல் கோபுரங்களை நிறுவினார். மேலும் கைபர் பக்துவன்வா-ஆப்கானித்தான் எல்லையை காவல் காக்க 67 எல்லைக் காவல் படைப்பிரிவுகள் நிறுவப்பட்டது.

பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்கள், 16 டிசம்பர் 2014 அன்று பெசாவர் இராணுவப் பள்ளிக்கூடம் மீதான தாக்குதலில் 132 மாணவ மாணவிகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டனர்.[5].[6].

2021 காபூல் வீழ்ச்சிக்குப் பின் பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான்களின் கை ஓங்கியது. 2022ம் ஆண்டின் முடிவில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 13 தற்கொலை படைத் தாக்குதல்கள் நடைபெற்றது. இதன் பின் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின் சூன 2022ல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் நவம்பர் 2022ல் தெக்ரிக் -இ-தாலிபான் அமைப்பானது சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி, கைபர் பக்துன்வா மாகாணம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை அதிகப்படுத்தியது.

7 ஏப்ரல் 2023 அன்று பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் செரீப் தலைமையிலான தேசியப் பாதுகாப்பு குழு எடுத்த முடிவின்படி, நாடு முழுவதும் அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களை அடக்க இராணுவ நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

12 டிசம்பர் 2023 அன்று பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்த 23 பாகிஸ்தான் இராணுவ வீரர்களை இக்கிளர்ச்சிக் குழுவினர் கொன்றனர்.[7]

2023 பெசாவர் பள்ளிவாசல் தற்கொலைப்படை குண்டு வெடிப்பில் 95 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 223 பேர் காயம் அடைந்தனர். இதற்கு பாகிஸ்தான் தலிபான்கள் பெறுப்பேற்றது.[8] [9]

மேற்கோள்கள்

தொகு
  1. Lieven, Anatol (2017). "Counter-Insurgency in Pakistan: The Role of Legitimacy". Small Wars & Insurgencies 28: 166–190. doi:10.1080/09592318.2016.1266128. 
  2. Roul, A. (2016). How Operation Zarb-e-Azb Changed Pakistan’s Tribal Areas. Jamestown Foundation Terrorism Monitor, 14(12), 5-7.
  3. Khan, S.R. and Khan, A. (2020). From War to Peace: The Challenges and Opportunities in Pakistan’s Counter-Terrorism Environment Post Operation Zarb-e-Azb. Journal of Policing, Intelligence and Counter Terrorism, 15(2), 121-139
  4. The Role of Lashkar-i-Islam in Pakistan’s Khyber Agency
  5. http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141216_pakistan_attack பாகிஸ்தான் பள்ளிக் கூடத்தில் படுகொலை 141 பேர் பலி
  6. "As it happened: Pakistan school attack". BBC. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
  7. Pakistan: 23 soldiers killed in attack on army base
  8. "பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் பலி 92 ஆக அதிகரிப்பு; தாக்குதலுக்கு பாக். தலிபான்கள் பொறுப்பேற்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
  9. "பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு - 28க்கும் மேற்பட்டோர் பலி". BBC News தமிழ். 2023-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.