கைர்டாபாத் சட்டமன்ற தொகுதி

கைர்டாபாத் சட்டமன்ற தொகுதி (Khairtabad Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியாகும். தலைநகரம் ஐதராபாத்தில் இடம்பெற்றுள்ள 15 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இத்தொகுதி செகந்தராபாது மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியுமாகும்.

பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த சி. இராமச்சந்திர ரெட்டி 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றார்.

சட்டமன்ற தொகுதியின் எல்லை தொகு

இச்சட்டமன்ற தொகுதியில் பின்வரும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

பகுதிகள்
கைர்டாபாத்
நாராயண்குடா
ஐதர்குடா
இமையட்நகர்
இலக்டிகாபுல்
சோமாசி குடா
புஞ்சாகட்டா
ராச்பவன் ரோடு
பஞ்சாரா இல்சு
பசீர்பாக் (பகுதி)
கிங் கோடி (பகுதி)
சிந்தால் பாசுட்டி (பகுதி)

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

கைர்டாபாத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் பட்டியல் [1]

தேர்தல் நடந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1967 நாரலா சால்கிரன் இந்திய தேசிய காங்கிரசு
1972 நாரலா சால்கிரன் இந்திய தேசிய காங்கிரசு
1978 பி. சனார்தன் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1983 நாரலா சால்கிரன் சுயேட்சை
1985 பி. சனார்தன் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1989 பி. சனார்தன் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1994 பி. சனார்தன் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1999 கே. விசய ராமா ராவ் தெலுங்கு தேசம் கட்சி
2004 பி. சனார்தன் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2008 பி. விசுனுவர்தன் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2009 தனம் நாகேந்தர் இந்திய தேசிய காங்கிரசு
2014-18 சி. இராமச்சந்திர ரெட்டி பாரதிய சனதா கட்சி
2018 தனம் நாகேந்தர் தெலுங்கானா இராட்டிர சமிதி

மேற்கோள்கள் தொகு