கொக்கட்டிச்சோலை
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்
கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர். கொக்கட்டி மரங்கள் இங்கே சோலை போன்று காட்சி தருவதால் இதற்கு கொக்கட்டிச்சோலை என்று பெயர் வந்தது.[1] இங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழிலாக விவசாயம் விளங்குகிறது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலானது இங்கு அமையப் பெற்றுள்ளது. ஈழத்திலுள்ள சுயம்பு லிங்கம் கொண்ட கோயில்களில் இது மிகவும் முக்கியமானதாகும். இது மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்குப் புறமாக உள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் கொக்கட்டிச்சோலை மிகவும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[2][3]
கொக்கட்டிச்சோலை | |
---|---|
ஊர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிரதேச செயலாளர் பிரிவு | மண்முனை தென்மேற்கு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nuraic-cōlai, Kokkaṭṭic-cōlai, Puṉṉaic-cōlai, Camiḷañ-cōlai, Tumpalañ-cōlai, Mutirañ-cōlai". TamilNet. August 18, 2007. https://www.tamilnet.com/art.html?catid=&artid=23038.
- ↑ "Kokkadichcholai Siva Thondan Asramam". kataragama.org. Archived from the original on 18 October 2019. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "Welcome to UTHRJ: Report 8, Chapter 3". Archived from the original on 2015-07-14. பார்க்கப்பட்ட நாள் 2007-08-24.