கொக்கோகம் என்பது வடமொழியில் எழுதப்பட்ட ஓர் இன்பவியல் நூலாகும். காம சூத்திரத்திற்கு இது காலத்தால் பிந்தியது என்பர். இதை இயற்றியவர் கொக்கோக முனிவர் என அறியப்படுகிறார். அதிவீரராம பாண்டியர் இந்நூலைத் தமிழ்மொழியில் வழங்கினார்.[1][2] இந்நூல் பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகவும் ஆண்களை முயல், மான், காளை, குதிரை என நான்கு வகையினராகவும் பிரிக்கிறது.

கோக்கோகம் அல்லது இன்பவிளக்க நூல் என்பது அதிவீரராம பாண்டியர் என்பவர் சமசுகிருத நூலை மொழிபெயர்த்து தமிழில் எழுதிய ஒரு பாலியல் நூல் ஆகும். பாலியல் தொடர்பாக தமிழில் எழுந்த முதல் நூல்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த நூலின் சுவடிகள் இரண்டு வெல்கம் நிறுவன நூலகத்தில் (Wellcome Institue's Library) உள்ளது.[3]

பரவலர் ஊடகங்களில்

தொகு

“........பெண்கள் நான்கு ‌வகை, இன்பம் நூறு” வகை என்ற திரைப்பாடல் வரிகள் கொக்கோக நூற் செய்தியை அடிப்படையாகக் கொண்டது எனலாம்

உசாத்துணை

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 6, 2013.
  2. கவிஞர் பத்மதேவன் (2010). அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும். சென்னை: கற்பகம் புத்தகாலயம். p. 20.
  3. Catalogue of Tamil Manuscripts in the Library of the Wellcome Institute for the History of Medicine. S. Gunasingam. The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland , No. 2 (1990), pp. 359-369
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கோகம்&oldid=2914193" இலிருந்து மீள்விக்கப்பட்டது