கொடிகளுக்கான நினைவுச்சின்னம்
கொடிகளுக்கான நினைவுச்சின்னம் என்பது பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரத்தில் உள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இந்த சின்னம் நகரத்தின் முக்கிய இடமான இபிரபுயரா பூங்காவின் முகப்பில் அமைந்துள்ளது.
கொடிகளுக்கான நினைவுச்சின்னம் | |
---|---|
போர்த்துகீசியம்: O Monumento às Bandeiras | |
நினைவுச்சின்னத்தின் முன் தோற்றம் | |
ஓவியர் | விக்டர் பிரெசெரெட் |
ஆண்டு | 1921 |
ஆக்கப் பொருள் | கிரானைட் |
வரலாறு
தொகு1921 ஆம் தொடங்கப்பட்டு 1954 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னம் பந்தேராசு என் அழைக்கப்படும் 17ஆம் நூற்றாண்டு நிகழ்வைக் குறிப்பதாகும். கடற்கரையில் இருந்த மக்கள் நாட்டின் உள்பகுதிக்கு சென்று தங்கள் இருப்பிடத்தை அமைத்துக்ககொண்ட நிகழ்வை பந்தேராசு என்பர். இதன் அமைவிடம் மற்றும் அளவின் காரணமாக இந்த நினைவுச்சின்னம் சாவோ பாவுலோ நகரத்தின் ஒரு முக்கிய அங்கமாகி விட்டது.
அமைவிடம்
தொகுஇந்த நினைவுச்சின்னம் இபிரபுயரா பூங்காவின் முகப்பிலும், நகரத்தின் சட்டப்பேரவையான சூலை 9 அரண்மனையின் எதிரிலும் அமைந்துள்ளது.