கொடியலூர் அகத்தீசுவரர் கோயில்
கொடியலூர் அகத்தீசுவரர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
கோயில் அமைப்பு
தொகுநுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். அடுத்து மூலவர் சன்னதிக்கு முன்பாக வலது புறம் எமதர்மராஜனும், இடது புறம் சனீஸ்வர பகவானும் உள்ளனர். மூலவராக அகஸ்தீஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதிக்கு இடது புறம் ஆனந்தவல்லி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், பாலசுப்பிரமணியன், விஜயலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் இறைவன் அகஸ்தீஸ்வரர், இறைவி ஆனந்தவல்லி.
சிறப்பு
தொகுசனீஸ்வர பகவானும், எமதர்மராஜாவும் பிறந்த தலமென்றும், அவர்கள் இங்கு வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. [1]