கொடுங்கால்

கொடுங்கால் என்பது காரி வள்ளல் ஆண்ட திருக்கோவலூர் நாட்டில் பெண்ணை ஆற்றங்கரையில் இருந்த ஓர் ஊர். [1]

காவிரிப்பூம்பட்டினத்தில் கொடுங்கால் என்னும் பெயர் கொண்ட கோபுரம் ஒன்று இருந்தது. இந்தக் கோபுரம் சற்றே சாய்ந்திருந்தது பற்றிக் கொடுங்கால் எனப்பட்டது.[2]

தினைக்கதிர் வளைவு, [3]
முதலையின் கால்வளைவு, [4]
காதில் மாட்டும் வளையம், [5]
முள்ளிப்பூவின் வளைவு, [6]
ஆகியவை கொடுங்கால் என வழங்கப்பட்டன.

அடிக்குறிப்பு தொகு

  1. கோவல் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்றுறை பெண்ணையம் பேர்யாற்று நுண் அறல் கடுக்கும் … கூந்தல் – அம்மூவனார் - அகநானூறு 35
  2. கொடுங்கால் மாடம் - பட்டினப்பாலை 261
  3. தினை கொடுங்கால் நிமிர – நற்றிணை 44
  4. கொடுங்கால் முதலை - குறுந்தொகை 324
  5. கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை - பட்டினப்பாலை 23,
  6. முள்ளிக் கொடுங்கால் மாமலர் - பெரும்பாணாற்றுப்படை 216
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுங்கால்&oldid=883787" இலிருந்து மீள்விக்கப்பட்டது