கொடுங்கூர் தேவி கோயில்
கொடுங்கூர் தேவி கோயில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொடுங்கூரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் கொடுங்கூரம்மா ஆவார். இக்கோயில் 200 ஆண்டுகளுக்கு மேலான கோயிலாகக் கருதப்படுகிறது. முதலில் மடத்தில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நிர்வாகத்தில் இருந்த இக்கோயில், பின்னர் திருவிதாங்கூர் தேவஸ்வத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் மீனம் மாதம் பூரம் நட்சத்திரத்தில் முக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 10 நாள் விழா காவடியாட்டத்திற்குப் பெயர் பெற்றதாகும். [1]