கொடை விழா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் சிறுதெய்வ வழிபாட்டு விழாக்கள் கொடை விழா என அழைக்கப்படுகின்றன. இந்தக் கொடை விழா பெரும்பான்மையாக தமிழ் மாதங்களான பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறுகின்றன. எனவே இது முன்பு கோடை விழா என்றழைக்கப்பட்டு, பின்னர் கொடை விழா என்று மருவி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
காலையில் கால்நடுதல் என்ற சடங்குடன் கொடை விழா ஆரம்பிக்கும். இரவில் ஆடு, கோழி, பன்றி ஆகிய விலங்குகளை பலியிடும் நிகழ்வுகள் கொடை விழாவின் இரவில் நடக்கும். அதை சாமக்கொடை என்பர்.