கொட்டிச்சேதம்

கொட்டிச்சேதம் என்பது நாட்டிய முறைகளுள் ஒன்று. இந்த நாட்டியம் முப்புரமெரித்த வேளையில் விரிசடைக்கடவுள் சிவபெருமான் ஆடியது என்று சிலரும்[1]காஞ்சியில் தவமிருந்த சக்தியின் முன் ஆடியது [2]என்றும் உமையொருபாகனாய் இறைவன் ஆடிய நடனம் என்றும் கூறுவர். சடைமுடி கலைந்து அலம்பி ஆடும். உமையொரு பாகனாக சிவபெருமான் ஆடுகின்ற ஆட்டம். அதிலே, இடது புறம் ஆண்பாதி கண்ணில் கோபம் கனன்று சிவக்க, வலப் புறம் பெண்பாதியில் கண் அன்பு பொங்கும். வலதுகால் ஆடும், இடது கால் அசையாது நிற்கும், வலது சடை அழகாக அப்படியே இருக்க, இடது சடைமுடி கலைந்து அலம்பி ஆடும் என்று சொல்லப்படுகிறது.[3]

மேற்கோள்கள்:

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டிச்சேதம்&oldid=1042869" இலிருந்து மீள்விக்கப்பட்டது