கொண்டபள்ளி சிறீனிவாசு
கொண்டபள்ளி சிறீனிவாசு (Kondapalli Srinivas) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்..[1] ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவராக அரசியலில் இயங்கினார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் கச்சபதிநகரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]
கொண்டபள்ளி சிறீனிவாசு Kondapalli Srinivas | |
---|---|
ஒரு தொழிலதிபரும் மென்பொருள் நிபுணருமான கொண்டபள்ளி சிறீனிவாசு ஒரு சமூக சேவகரும் ஆவார். ஏப்ரல் 13, 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று கொண்டபள்ளி கொண்டலராவ் மற்றும் சுசீலா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு மனைவி லட்சுமி சிந்து, மகன் விகான், மகள் மேதா என்ற அளவான குடும்பம். விசாகப்பட்டிணத்தில் கல்வி கற்ற இவர் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். அங்கேயே மென்பொருள் நிபுணராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Pativada, Sreenu Babu (2024-04-17). "TDP's young gun gears up to face Botcha's brother". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-06.
- ↑ "Gajapathinagaram, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: TDP's Kondapalli Srinivas wins Gajapathinagaram with 98051 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-06.
- ↑ "Gajapathinagaram Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-06.