கொண்டவிட்டான்திடல்
கொண்டவிட்டான்திடல் என்பது தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். விவசாயம் மற்றும் விவசாயச் சார்புடையவர்கள் இப்பகுதியில் உள்ளனர், காவேரியின் கிளை நதியான வெட்டாறு பாய்ந்து இப்பகுதியில் வளம் செழிக்கின்றது. இந்த ஊர் கொண்டல், என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பெயர்க் காரணம்
தொகுஇவ்வூரின்பெயர் கொண்டல் வட்டம் திடல் ஆகும். தற்போது இவ்வூர் பெயர் மருவி கொண்டவிட்டான்திடல் என்று அழைக்கப்படுகிறது. கொண்டல் என்பது கிழக்கு திசையில் இருந்து வீசக் கூடிய காற்று. வட்டம் என்பது வீசும் காற்று வட்டமாகச் சூழலும், திடல் என்பது இடம் அல்லது நிலபகுதி.
ஊராட்சி
தொகுஇவ்வூரைத் தலைமையிடமாக கொண்டு கொண்டவிட்டான்திடல் ஊராட்சியாகவும் செயல்படுகிறது இந்த ஊராட்சியில் தாழக்குடி, முருக்கங்குடி, கிளியனூர் போன்ற கிராமங்களும் உள்ளடக்கியது