கொந்தர்
கொந்துதல் செய்பவர் கொந்தர் அல்லது குறும்பர் (Hacker) என அழைக்கப்படுவார்.[1] கொந்துதல் என்பது கணினியொன்றின் பலவீனங்களை அறிந்து அதனைத் தன்வசப்படுத்துதல் ஆகும்.[2] கணினிக் கொந்தர் எனப்படுபவர் கணினியொன்றிலுள்ள பலவீனங்களை அறிந்து அதனைத் தன்வசப்படுத்துபவர் ஆவார்.[3] கொந்தர்கள் தமது ஆதாயத்துக்காகவும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் சவாலுக்காகவும் கொந்துதல் செய்கிறார்கள்.
வகைகள்
தொகுவெண்டலைப்பாக் கொந்தர்
தொகுவெண்டலைப்பாக் கொந்தர் என்பவர் தீய செயல்கள் புரிவதை நோக்கமாகக் கொள்ளாது கொந்துதல் செய்பவர் ஆவார்.[4] தமது சொந்தக் கணினி பாதுகாப்பானதா எனக் கொந்துதல் செய்து சரிபார்ப்பவரே வெண்டலைப்பாக் கொந்தர் ஆவார்.
கருந்தலைப்பாக் கொந்தர்
தொகுகருந்தலைப்பாக் கொந்தர் என்பவர் தனிப்பட்ட ஆதாயத்துக்காகக் கொந்துதல் செய்பவர் ஆவார்.[5]
சாம்பற் தலைப்பாக் கொந்தர்
தொகுசாம்பற் தலைப்பாக் கொந்தர் என்பவர் குறும்பர், கருந்தலைப்பாக் கொந்தர் ஆகியோரின் சேர்க்கை ஆவார். சாம்பற் தலைப்பாக் கொந்தர் ஒரு கணினியைக் கொந்துதல் செய்வதன் மூலம் அதன் நிருவாகிக்கு அக்கணினியின் பாதுகாப்பற்ற தன்மையை எடுத்துரைப்பார்.[6] அதே நேரம் அந்தக் கணினியைச் சீர் செய்வதற்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையையும் பெற்றுக் கொள்வார்.
திறக்கொந்தர்
தொகுதிறக்கொந்தர் என்பவர் கொந்துதலில் திறமையானவர் ஆவார்.[7]
பழகு கொந்தர்
தொகுபழகு கொந்தர் என்பவர் ஏனைய கொந்தர்களால் எழுதப்பட்ட மென்பொருட்களைக் கொண்டு கொந்துதல் செய்யும் திறமை குறைந்த கொந்தர் ஆவார்.[8]
புதிய கொந்தர்
தொகுபுதிய கொந்தர் என்பவர் கொந்துதலுக்குப் புதியவரும் ஏறத்தாழக் கொந்துதல் பற்றிய அறிவும் அநுபவமும் இல்லாதவர் ஆவார்.[9]
நீலத் தலைப்பாக் கொந்தர்
தொகுநீலத் தலைப்பாக் கொந்தர் என்பவர் மென்பொருளில் உள்ள வழுக்களைக் கொந்துதல் மூலம் கண்டறிபவர் ஆவார். இதன் மூலம் மென்பொருளில் உள்ள பலவீனங்களைச் சரிப்படுத்த முடியும். மைக்ரோசாப்ட் நிறுவனம் நீலத் தலைப்பாக் கொந்தர்களைப் பயன்படுத்துகின்றது.[10]
வீறு கொந்தர்
தொகுவீறு கொந்தர் என்பவர் சமூக ரீதியான, சமய ரீதியான அல்லது அரசியற் செய்தி ஒன்றைத் தெரியப்படுத்தக் கொந்துதலைப் பயன்படுத்துபவர் ஆவார்.[11]
தாக்குகைகள்
தொகுதாக்குகைகள் பெரும்பாலும் மூன்று படிமுறைகளில் கொந்தர்களால் செய்யப்படும்.
- இலக்கைப் பற்றிய விபரங்களை அறிதல்
- தாக்குகைக்கான வழிகளை இனங்கண்டு கொள்தல்
- தன்வசப்படுத்தல்
தாக்குகைக்குப் பல்வேறு விதமான நுட்பங்கள் கையாளப்படுகின்றன.
நுட்பங்கள்
தொகுவழுத் தேடுநர்
தொகுவழுத் தேடுநர் எனப்படுவது ஒரு வலையமைப்பிலுள்ள கணினிகளிலுள்ள பலவீனங்களை உடனடியாக அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும்.[12]
கடவுச் சொல் உடைத்தல்
தொகுகடவுச் சொல் உடைத்தல் என்பது ஒரு கணினியில் சேமிக்கப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட தரவுகளின் மூலம் கடவுச் சொற்களை மீட்டெடுத்தலைக் குறிக்கும்.[13] கடவுச் சொற்களுக்கான அநுமானங்களை முயற்சிப்பதன் மூலம் கடவுச் சொல்லைக் கண்டுபிடிப்பதும் இவ்வகைக்குள் அடங்கும்.[14]
பொதி முகர்வர்
தொகுபொதி முகர்வர் என்பது பரிமாறப்படும் தரவுப் பொட்டலங்களைக் கைப்பற்றும் கருவி ஆகும்.[15] இதன் மூலம் பரிமாறப்படும் கடவுச் சொற்களையும் தகவல்களையும் திருட முடியும்.[16]
ஏமாற்றுப் பரப்புகை
தொகுஏமாற்றுப் பரப்புகை என்பது ஒரு மென்பொருள் போலவோ அல்லது ஓர் இணையத்தளம் போலவோ இன்னுமொரு போலி மென்பொருளை அல்லது இணையத்தளத்தை உருவாக்கி அதன் மூலம் பயனரின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் என்பவற்றைத் திருடுதல் ஆகும்.[17]
தீவேர் நிரல்
தொகுதீவேர் நிரல் என்பது தம்மை மறைத்துக் கொண்டு செயலாற்றும் நச்சுநிரலாகும்.[18] சில தீவேர் நிரல்களை நிறுவல் நீக்கம் செய்ய முடியாது. இதன் மூலம் தீவேர் நிரல் மென்பொருளை அனுப்பியவர் தாக்கப்பட்ட கணினியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.[19]
நயத் திருட்டு
தொகுநயத் திருட்டு என்பது பெரும்பாலும் கருந்தலைப்பாக் கொந்தர்களால் செய்யப்படுவது. ஒரு நிறுவனத்தின் பயனர்களைப் பயன்படுத்தி இத்திருட்டு நடைபெறும்.[20]
பொய்க் குதிரை
தொகுபொய்க் குதிரை என்பது பயனுள்ள மென்பொருள் போலத் தோற்றமளிக்கும் தீய மென்பொருள் ஆகும்.[21] பொய்க் குதிரையைப் பரப்பியவரால் பொய்க் குதிரை உள்ள கணினியைக் கட்டுப்படுத்துவதற்கான வழியை உருவாக்க முடியும்.[22]
நச்சு நிரல்
தொகுநச்சு நிரல் என்பது செயலிகள், ஆவணங்கள் என்பனவற்றுள் நுழைந்து தானாகவே பெருகும் நிரல் ஆகும்.[23] இது தீ நுண்மத்தின் செயற்பாட்டை ஒத்தது. தீ நுண்மமானது உயிருள்ள கலங்களுள் நுழைந்து பெருகும்.[24] அது போன்றதே நச்சு நிரல் ஆகும்.
புழு
தொகுநச்சு நிரலைப் போலவே, புழுவும் தானாகவே பெருகும்.[25] இது பயனரின் தலையீடு இன்றியே கணினி வலையமைப்பினூடாகச் செல்லும்.[26] ஒரு மென்பொருளினுள் நுழைந்து செயலாற்ற வேண்டிய தேவை புழுவுக்கு இல்லை.
விசைப் பதிவுக் கருவி
தொகுவிசைப் பதிவுக் கருவி என்பது ஒரு கணினியில் அழுத்தப்படும் சாவிகளைப் பதிவு செய்யும் கருவி ஆகும்.[27] இதன் மூலம் பயனரின் கடவுச் சொல் மற்றும் ஏனைய இரகசிய விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.[28] சில விசைப் பதிவுக் கருவிகள் நச்சுநிரல்கள், பொய்க் குதிரைகள், தீவேர் நிரல்கள் என்பனவற்றின் துணையுடன் மறைந்து இயங்குநிலையில் இருக்கும். ஆனால், சில சந்தர்ப்பங்களில் விசைப் பதிவுக் கருவிகள் பாதுகாப்பை மேம்படுத்தவும் திருட்டைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
=மேற்கோள்கள் =
தொகு- ↑ கொந்தர் (ஆங்கில மொழியில்)
- ↑ கொந்து (ஆங்கில மொழியில்)
- ↑ கணினிக் கொந்தருக்கான வரைவிலக்கணம் (ஆங்கில மொழியில்)
- ↑ வெண்டலைப்பாக் கொந்தர் (ஆங்கில மொழியில்)
- ↑ கருந்தலைப்பாக் கொந்தர் (ஆங்கில மொழியில்)
- ↑ சாம்பற் தலைப்பாக் கொந்தர் (அல்லது சாம்பல் தலைப்பாக் கொந்தர்) (ஆங்கில மொழியில்)
- ↑ திறக்கொந்தர் என்றால் என்ன (ஆங்கில மொழியில்)?
- ↑ மழலைக் கொந்தர் (ஆங்கில மொழியில்)
- ↑ கொந்தருக்கான வரைவிலக்கணம் (ஆங்கில மொழியில்)
- ↑ ["நீலத் தலைப்பாக் கொந்தர் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-08. பார்க்கப்பட்ட நாள் 2021-10-27. நீலத் தலைப்பாக் கொந்தர் (ஆங்கில மொழியில்)]
- ↑ வீறு கொந்தர் (ஆங்கில மொழியில்)
- ↑ வழுத் தேடுநருக்கான வரைவிலக்கணம் (ஆங்கில மொழியில்)
- ↑ கடவு உடைத்தல் (ஆங்கில மொழியில்)
- ↑ கடவுச் சொல் உடைத்தல் (ஆங்கில மொழியில்)
- ↑ ["பொதி முகர்வருக்கான வரைவிலக்கணம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03. பொதி முகர்வருக்கான வரைவிலக்கணம் (ஆங்கில மொழியில்)]
- ↑ பொதி முகர்வர் என்றால் என்ன (ஆங்கில மொழியில்)?
- ↑ ஏமாற்றுப் பரப்புகை (ஆங்கில மொழியில்)
- ↑ தீவேர் நிரல் வரைவிலக்கணம் (ஆங்கில மொழியில்)
- ↑ எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் ரூட்கிட் வைரஸ் (தமிழில்)
- ↑ நயத் திருட்டு (ஆங்கில மொழியில்)
- ↑ பொய்க் குதிரை (ஆங்கில மொழியில்)
- ↑ ["பொய்ப் புரவி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03. பொய்ப் புரவி (ஆங்கில மொழியில்)]
- ↑ நச்சு நிரல் (ஆங்கில மொழியில்)
- ↑ ["விஞ்ஞானம் (தமிழில்)" (PDF). Archived from the original (PDF) on 2011-08-12. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03. விஞ்ஞானம் (தமிழில்)]
- ↑ ["ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2011-11-25. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)]
- ↑ புழு (ஆங்கில மொழியில்)
- ↑ வலை வரைவிலக்கணங்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ விசைப் பதிவுக் கருவி (ஆங்கில மொழியில்)