கொனசீமா மாவட்டப் போராட்டம்
கொனசீமா மாவட்டப் போராட்டம் (Konaseema district protest) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற ஒரு போராட்டமாகும்.[1] ஆந்திராவிலுள்ள கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர் அம்பேத்கார் கொனசீமா மாவட்டம் என மாற்றி அரசு அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து கொனசீமா மாவட்டப் போராட்டம் நடந்து வருகிறது.[2] கொனசீமா சாதனா சமிதி, கொனசீமா பரிரக்சனா சமிதி மற்றும் பிற அமைப்புகளின் உறுப்பினர்களால் போராட்டம் முதன்மையாக நடத்தப்பட்டது.[3]
போராட்டங்களும் சம்பவங்களும்
தொகுஅரசின் இந்த பெயர் மாற்ற முடிவை எதிர்த்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதியன்று பல இளைஞர்கள் ஒன்று திரண்டு அமலாபுரத்தில் "சலோ கொனசீமா" என்ற பேரணியைத் தொடங்கினர். பேரணியின் போது, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கல்லுாரி பேருந்து, ஓர் அரசுப் பேருந்து ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட 20 காவலர்களுக்கும், போராட்டக்காரர்களில் 40 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.[4] இதனால் கொனசீமா மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுகிறது.[5][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mob Goes on a Rampage Over Renaming Konaseema after Dr BR Ambedkar". Sakshi Post (in ஆங்கிலம்). 2022-05-24. பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
- ↑ "ஆந்திரா: அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரம்; அமைச்சர், எம்.எல்.ஏ இல்லங்களுக்கு தீ வைப்பு". பார்க்கப்பட்ட நாள் 25 May 2022.
- ↑ Today, Telangana (2022-05-24). "AP: Konaseema district name change protests lead to lathicharge in Amalapuram". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
- ↑ "மாவட்டத்தின் பெயரை மாற்றியதால் பதற்றம் : ஆந்திராவில் அமைச்சர் வீட்டுக்கு தீ". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=3037716. பார்த்த நாள்: 25 May 2022.
- ↑ "అమలాపురంలో తీవ్ర ఉద్రిక్తతలు.. పోలీసులపై రాళ్ల దాడి, బస్సుకు నిప్పు". Samayam Telugu (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
- ↑ Reporter, Staff (2022-05-24). "Dozens of protesters, policemen injured in clash over renaming Konaseema district in Andhra Pradesh" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-dozens-of-protesters-policemen-injured-in-clash-over-renaming-konaseema-district/article65456885.ece.
- ↑ Staff, Scroll. "Homes of Andhra minister, MLA set on fire during protests against renaming of Konaseema district". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.