கொனோடோப்பு போர்

உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது, கிழக்கு உக்ரைனை தாக்குவதற்காக உருசிய இராணுவம் கொனோட

கொனோடோப்பு போர் (Battle of Konotop) என்பது 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது, கிழக்கு உக்ரைனை தாக்குவதற்காக உருசிய இராணுவம் கொனோடோப்பு நகரத்தை முற்றுகையிட்டபோது அந்நகரைச் சுற்றிலும் உருசிய-உக்ரைன் இராணுவப் படைகளுக்கு இடையில் நடைபெற்ற போர் நடவடிக்கையாகும்.

கொனோடோப்பு போர்
Battle of Konotop (2022)
கிழக்கு உக்ரைன் தாக்குதலும் 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பும் பகுதி
நாள் 24–25 பிப்ரவரி 2022 (1 நாள்)
இடம் உக்ரைன், சுமி மண்டலம், கொனோடோப்பு நகரம்
உருசியா வெற்றி
பிரிவினர்
 உருசியா  உக்ரைன்
தளபதிகள், தலைவர்கள்
தெரியவில்லை உக்ரைன் ஆர்ட்டெம் செமெனிகின்
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை
உக்ரைன்:
2 காயம்[1]
உக்ரைன்: 3 பேர் காயம்[2]

போர்

தொகு

பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று அதிகாலையில், வடகிழக்கில் இருந்து முன்னேறிய உருசியப் படைகள் கொனோடோப்பு நகரைச் சுற்றி வளைத்து, அதை முற்றுகையிட்டன.[3] உக்ரைனியப் படைகள் தாக்குதலில் இருந்து தங்கள் நிலைகளை பாதுகாக்க போரில் ஈடுபட்டன. பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று காலை கொனோடோப்பு நகரில் உருசிய படையின் ஆயுதங்கள் எரிந்ததாகக் கூறப்படுகிறது. நகரத்தை முற்றுகையிட்ட உருசியப் படைகளுக்கு போதுமான ஆயுதங்கள் கிடைக்காததால் பின்வாங்கிவிட்டதாக உக்ரைனிய இராணுவம் கூறியது.[4][5]

உக்ரைனிய இராணுவத்தின் கூற்றுப்படி, பிப்ரவரி 25 அன்று அரசாங்கப் படைகள் நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்தன.[6][7]

பின்விளைவு

தொகு

மார்ச் 2 அன்று, கொனோடோப்பின் நகரத் தந்தையான ஆர்டெம் செமினிகின், நகரத்தில் உள்ள உருசியப் படைகளை குடியிருப்பாளர்கள் எதிர்த்தால் நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அவர்கள் எச்சரித்ததாகக் கூறினார்.[8] இருப்பினும், ஒரு காணொளியில் செமினிகின் நகரவாசிகளிடம் சண்டையிட விரும்புகிறீர்களா அல்லது சரணடைய விரும்புகிறீர்களா என்று கேட்டார். குடியிருப்பாளர்கள் "பெரும்பாலும்" சரணடைய மறுத்துவிட்டனர்.[9][10]

நாளின் பிற்பகுதியில், நகர அதிகாரிகள் உருசியப் படைகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். பேச்சுவார்த்தை 12 நிமிடங்கள் நீடித்தது. நகரின் அரசாங்கத்தை மாற்றவோ, நகரத்தில் துருப்புக்களை நிலைநிறுத்தவோ, போக்குவரத்திற்கு இடையூறாகவோ அல்லது உக்ரைனியக் கொடியை அகற்றவோ கூடாது என உருசியப் படைகள் ஒப்புக்கொண்ட உடன்பாடு ஏற்பட்டது. நகர அதிகாரிகள் பதிலுக்கு உருசிய படைகளைத் தாக்க மாட்டார்கள் என்றும் ஒப்புக்கொண்டனர்.[11]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "На Сумщині за день близько сотні поранених, 4 – загиблих | Данкор онлайн | Сумской информационный портал: все новости Сумщины". Archived from the original on 27 February 2022. பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
  2. "На Сумщині за день близько сотні поранених, 4 – загиблих | Данкор онлайн | Сумской информационный портал: все новости Сумщины". Archived from the original on 27 February 2022. பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
  3. "The city of Konotop in Sumy Oblast is under siege now, Russian military convoys are moving west towards Kyiv" (in Ukrainian). РБК-Украина. 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 26 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220226003556/https://twitter.com/IAPonomarenko/status/1497022354337247235?ref_src=twsrc%5Etfw. 
  4. "Конотоп залишається під контролем України + ВІДЕО" [Konotop is under control of Ukraine] (in உக்ரைனியன்). Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
  5. "Russian troops stop near northeast city of Konotop -Ukraine's land forces". TimesLIVE (in ஆங்கிலம்). Archived from the original on 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
  6. Ward, Alexander. "'Almost not possible' for Ukraine to win without West's help, Ukraine official says" (in en). Politico இம் மூலத்தில் இருந்து 26 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220226175146/https://www.politico.com/newsletters/national-security-daily/2022/02/25/almost-not-possible-for-ukraine-to-win-00011969. 
  7. "Ukraine war news from February 25: Kyiv suburbs breached, Russian forces face resistance, Zelensky warns Russia will 'storm' capital". Financial Times. 26 February 2022 இம் மூலத்தில் இருந்து 26 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220226151541/https://www.ft.com/content/93554a7e-f974-49fc-85ba-c111d253b002. 
  8. "As Russian invaders demand that Konotop surrender, mayor explicitly defies threats". www.ukrinform.net (in ஆங்கிலம்). Archived from the original on 3 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
  9. Valeria Polischuk. "Мер Конотопа: місту поставили ультиматум – за опір накриють артилерією". RBC Ukraine (in உக்ரைனியன்). Archived from the original on 3 March 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
  10. Khavin, Dmitriy; Botti, David; Tiefenthäler, Ainara (2 March 2022). "Mayor in Ukraine asks his city's residents whether they wish to fight or surrender." (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 3 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220303040505/https://www.nytimes.com/2022/03/02/world/europe/mayor-russian-troop-grenade.html. 
  11. Natalia Gurkovskaya. "Бої на Сумщині – влада Конотопа провела переговори з окупантами після ультиматуму". RBC Ukraine (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனோடோப்பு_போர்&oldid=3498822" இலிருந்து மீள்விக்கப்பட்டது