கொப்பரை கொப்பரை
கொப்பரை கொப்பரை என்பது உன்னிப்போடு கூடிய ஒரு உத்தித்திற விளையாட்டு.
சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்காருவர். அவரவர் தொடையில் தட்டிக்கொண்டு முன்பாட்டும் பின்பாட்டுமாகப் பாடுவர்
பாட்டு:
எல்லாரும் சேர்ந்து பாடும் பின்பாட்டு | பட்டவர் பாடும் முன்பாட்டு |
---|---|
கொப்பரை கொப்பரை | மாட்டுக் கொப்பரை |
கொப்பரை கொப்பரை | ஆட்டுக் கொப்பரை |
கொப்பரை கொப்பரை | மான் கொப்பரை |
கொப்பரை கொப்பரை | எருமைக் கொப்பரை |
கொப்பரை கொப்பரை | ஈக் கொப்பரை |
ஆடு, மாடு, மான், எருமை ஆகியவற்றைக் கொம்புள்ள விலங்காகத் தொகுத்துக் கூறினார். ஈயை அப்பட்டியலில் தொகுத்தது தவறு. எனவே ஈக் கொப்பரை எனச் சொன்னவுடன் யாரும் பின்பாட்டு பாடவும் கூடாது. தன் தொடையில் தட்டவும் கூடாது. இவற்றில் எது செய்தாலும் அவர் பட்டவர் ஆகவேண்டும். பூப்பெயர், காய்ப்பெயர், பழப்பெயர் பான்ற ஏதாவது ஓர் இனத்தைத் தெரிவு செய்துகொண்டு முன்பாட்டு பாடவேண்டும்.
இது ஒரு சுவையான விளையாட்டு.
பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1980