கொரிய அரங்கு
கொரிய அரங்கு (Korean theatre) என்பது கொரியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள கொரியர்கள் மேடையில் நிகழ்த்தும் அரங்கைக் குறிக்கிறது. இன்றைய கொரிய அரங்கு முனைப்போடு செயல்படுகிறது.[1][2]
கொரிய அரங்கு 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நாடக அரங்கை விட நிகழ்த்துதலையே (நிகழ்த்தும் கலைகளையே குறித்தது. அதில் கதைக்கருவுள்ள நாடகம் ஏதும் அமையவில்லை.நிகழ்த்து கலைகளில் நடனம், வெறியாட்டம் போன்ற சாமானிய சடங்குகள், வட்டரங்கு வித்தைகள் ஆகியவை விளங்கின. இவை நோலம் (놀음) அல்லது யியொன்ஃஈ (연희) எனப்பட்டன. இதன் பொருள் ஆட்டங்கள் அல்லது விளையாட்டுகள் என்பதாகும்.
கொரியப் பொது அரங்கு வடிவமாக 19 ஆம் நூற்றாண்டுவரை தால்சம் (탈춤), பன்சோரி (판소리 ஆகியவை விளங்கின. தால்சம் முகமூடி நடனத்தைக் குறிக்கும்.இதில் நடனத்தின் இடையிடையே பேச்சும் பாட்டும் உறையாடலும் அமையும். இதில் பல எள்ளல்வகை நாடகப் போக்கே பரவலாக அமையும். பன்சோரி என்பது கதைசொல்லல் முறையாகும். இதில் உரையாடல், பாடல், பேச்சு ஊடாக ஒரு மைய நிகழ்த்துநர் முழுக் கதையையும் சொல்லுவார். மற்றொருவர் முரசால் முழங்கி, அவ்வப்போது குரலிசையால் ஒருங்கிசைவையும் உணர்வையும் ஊட்டுவார் . (‘சுயிம்சே’-추임새) . தால்சமோ பன்சோரியோ வாய்மொழிவழி தலைமுறைக்குத் தலைமுறை தொடர்வனவே தவிர இவற்றுக்கு நிலையான எழுது வடிவமேதும் கிடையாது.
கொரியா 19 ஆம் நூற்றாண்டு பின்பகுதியில் அயல்நாட்டினரை தம் நாட்டில் வர இசைவு அளித்த்தும், முதல் பித்தியல் அறைமேடை அரங்கம், இயோபியுல்-சா(협률사) உருவானது. முதல் புத்தியல் உள்ளரங்கு 1902 இல் கட்டப்பட்ட்து. அதில் புதியவகை நாடகங்கள் (신극) அரங்கேறின. அந்நாளில் மேற்கத்தியவகை நாடகங்களைக் கொரியர்கள் புதுநாடகங்கள் என்றனர். புதிய மேடைமுறை அரிமுகமாகியது. அதில் சேக்சுபியர் நாடகங்கள் நடத்தப்பட்டன. அரங்கு நிகழ்த்துவோரிடையே ஓரியக்கம் தெளிவாகப் புதுநாடகங்களையும் மரபுவழி நாடகங்களையும் வறையறுத்தது. இன்று மரபு நாடகங்கள் வாழும் தேசியச் செல்வங்களாகக் காப்பாற்றப்படுகின்றன.அரசே திறமை மிக்க மரபுவழி நாடகக் கலைஞர்களைத் தேர்வுசெய்து நிதியளித்து அவற்றைப் பேணிக் காத்துவருகிறது.
நிகழ்கால அரங்கு மூவகைகளில் நடத்தப்படுகிறது. இவை அரசின் மரபு அரங்கு, வல்லுநரின் செய்முறை அரங்கு, தொழில்முறைக் குழும மக்கள் அரங்கு என்பனவாகும். மரபுவழி அரங்கைச் செழிக்கச் செய்ய தேசிய அரங்கு, சீயோல் நிகழ்த்துகலை மையம் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொரிய மரபு நாடகங்களும் சேக்சுபியர், செகாவ் நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. தேகாக்ரோ (대학로), எனப்படும் ‘off-Broadway’ அல்லது ‘off-off-Broadway’ எனும் இரண்டாம்வகை நாடகங்கள் கொரியாவீன் சீயோல் நகரில் நடத்தப்படுகின்றன. இவ்வகை நாடகங்கள் தனிக் கலைஞர்களின் முயற்சியால் செய்முறை வடிவங்களாக நட்த்திப் பார்க்கப்படுகின்றன. இருதி பெருவாரியான அரங்கு மக்கள் அரங்கு ஆகும். பல தொழில்முறைக் குழுமங்கள் சீயோலில் பரந்த இடவெளிகள் உள்ள இடங்களில் பெரிய அரங்குகளைக் கட்டி பெயர்பெற்ர செய்முறைவழி நாடகங்களையும் இசைக் கச்சேரிகளையும் அரங்கேற்றுகின்றன. இவை நிகழ்கால அரங்கு வகைகளைக் குறிப்பனவே. நடைமுறையில் இவை கலந்து நட்த்தப்படுவதும் உண்டு என்பதை நினைவில் நிறுத்தவேண்டும். எனவே சிலவேளைகளில் தொழில்முறைக் குழும அரங்கில் செய்முறை நாடகங்களும் தேகாக்ரோ அரங்கில் பெயர்பெற்ற பிராட்வே இசைக் கச்சேரிகளும் நடக்கலாம்.