கொற்ற வள்ளை

தமிழ் இலக்கணத்தில் கொற்ற வள்ளை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "கொற்றம்" என்பது வெற்றியைக் குறிக்கும். "வள்ளை" என்பது ஒரு பாடல் வகை, பெண்கள் நெல் குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடுவது. எனவே, போரில் வென்ற அரசனைப் புகழ்வதையும், பகைவர் நாடு அழிவதற்காக வருந்துவதையும் பொருளாகக் கொள்ளும் இத்துறை "கொற்றவள்ளை" எனப்பட்டது.

இதனை விளக்க, மன்னனின் புகழைச் சொல்லிப் பகைவர் தேசம் அழிவதற்கு இரங்கியது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

மன்னவன் புகழ்கிளந்து
ஒன்னார்நாடு அழிபுஇரங்கின்று

எடுத்துக்காட்டு

தொகு
தாழார மார்பினான் தாமரைக்கண் சேந்தனவால்
பாழாய்ப் பரிய விழிவதுகொல் - யாழாய்ப்
புடைத்தேன் இமிர்கண்ணிப் பூங்கட் புதல்வர்
நடைத்தேர் ஒலிகறங்கும் நாடு
- புறப்பொருள் வெண்பாமாலை 41.

குறிப்பு

தொகு
  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 71

உசாத்துணைகள்

தொகு
  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.
  • http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0100.html

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொற்ற_வள்ளை&oldid=2053056" இலிருந்து மீள்விக்கப்பட்டது