கொலஜன் தூண்டல் சிகிச்சை

கொலஜன் தூண்டல் சிகிச்சை (Collagen induction therapy) அழகியல் மருத்துவ முறைகளுள் ஒன்று. இந்த மருத்துவ வழிமுறைகளில் உடலின் சருமத்தினை குறிப்பிட்ட ஊசி முறைகளைப் பயன்படுத்துவர். ஆனால் இந்த வழிமுறைகள் சிறிய ஊசிமுறைகளை விட சற்று வித்தியாசமானது.

கொலஜன் தூண்டல் சிகிச்சை

கொலஜன் தூண்டல் சிகிச்சை முறையில் பல முற்போக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை கண்டறியப்பட்ட வழிமுறைகளின் மூலம் முகப்பரு, சருமத்தில் தோன்றும் வடு போன்ற சருமப் பிரச்சினைகள் குணப்படுத்தப்படுகின்றன.[1]

இந்த மருத்துவ வழிமுறையில் கைதேர்ந்த மருத்துவர் மூலம் இயக்கக் கூடிய சாதாரண உருளை போன்ற கருவி பயன்படுத்தப்படும். இதனை “சிறிய உருளைகள்” எனவும் அழைப்பர். 1990 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குப் பிறகு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மருத்துவக் கருவியானது வெவ்வேறு பெயர்களுடன் பயன்படுத்தப்படுகிறது. அதில் ‘டெர்மாரோலர்’ (Dermaroller) எனும் பெயர் முக்கியமானது. டெர்மாரோலர் எனும் மருத்துவக் கருவிக்கான காப்புரிமையினை 2000 ஆம் ஆண்டு ஹோர்ஸ்ட் லியபெல் பெற்றார். தேவையான அதிர்வெண்ணுக்கு ஏற்ப இந்த சிறிய பேனா போன்ற கருவியினை மாற்றிக்கொள்ளலாம்.[2] இதற்குத் தேவையான ஆற்றல் வெளிப்புற மோட்டார் மூலம் வழங்கப்படும். டெர்மாரோலர் செயல்படும் சரும ஆழத்தினையும் தேவைக்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ள இயலும். சிறிய பேனா போன்ற தோற்றத்துடன் காணப்படுவதால் சரும பேனா, டெர்மா பேனா மற்றும் மைக்ரோ பேனா போன்ற சில பிரபலமான பெயர்களுடன் இது அழைக்கப்படுகிறது.

தோல் சமப்படுத்தும் கருவிதொகு

இக்கருவி சுத்தி போன்ற தோற்றத்துடன், அடிப்பாகத்தில் சுத்தமான எஃகினால் செய்யப்பட்டிருக்கும். இதிலுள்ள அடுத்தடுத்த கூர்மையான ஊசிகள் சருமத்தினில் செயல்பட்டு அதனை சமப்படுத்தும். இதனை சிறிய ஊசிமுறை அல்லது சரும ஊசிமுறை என்று பெயருடன் அழைப்பர். சருமத்தில் உள்ள புரோட்டீன் அளவினை தூண்டும் இச்செயல்முறை கொலஜன் தூண்டல் சிகிச்சை முறை என்று அழைக்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் இடைவெளிகளிலும், வயது முதிர்ந்தவர்கள் ஆறு முதல் எட்டு வாரங்கள் இடைவெளியிலும் இந்த சிகிச்சையினை எடுத்துக்கொள்ளலாம்.

டெர்மாரோலர் பயன்பாடுதொகு

இது இரு வழிகளில் உதவுகிறது.

1. சருமத்தின் அடித்தோலில் சிறிய பகுதிகளை உருவாக்குகிறது, இதன் மூலம் இரு பயன்கள் கிடைக்கின்றன.

 • சருமத்தின் மீது செலுத்தும் சிகிச்சைப் பொருள் செல்வதற்கான வழியினை ஏற்படுத்தும், அத்துடன் சருமத்தின் உட்பகுதி வரை செல்ல வழிவகுக்கும்.
 • திசுக்களுடன் இணைந்த சரும செல்களை துரிதப்படுத்தி அதிகப்படியான புரோட்டீன்களை உருவாக்கும். முன்பை விட சற்று வலுவான, தடிப்பான மற்றும் குண்டான சருமத்தினை உருவாக்கும்.

2. முகப்பரு வடுக்கள் ஆகியவற்றிற்குக் காரணமான நார்ச்சத்து இணைப்புகளை உடைத்து, அவற்றினை சீர்படுத்த உதவும்.

பயன்படுத்தும் இடங்கள்தொகு

டெர்மாரோலர் மருத்துவக் கருவியினை கொலஜன் தூண்டல் சிகிச்சை முறையில் பின்வரும் நிலைகளில் பயன்படுத்த இயலும்.[3]

 • சருமத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள்
 • தோல் இறுக்கங்கள் / வயது முதிர்ந்த தோற்றத்தினைக் குறைக்கும் செயல்பாடுகள்
 • வடுக்கள் / பருக்கள்
 • திறந்த துளைகள் / தோல் அமைப்புமுறை முன்னேற்றம்
 • வரி தழும்பு

டெர்மாரோலர் செயல்படுத்தும் வழிமுறைகள்தொகு

 • டெர்மாரோலர் செயல்படுத்தும் வழிமுறைகளை சிகிச்சை பெறுபவருக்கு தெளிவாக புரியவைக்க வேண்டும், இதன் மூலம் அவரின் தேவையற்ற பதட்டம் குறையும்.
 • தேவையான சருமத்தில் உணர்விழக்கச் செய்யும் சாதாரண மருந்து அளிக்கப்படும், இது சுமார் 45 நிமிடங்கள் வரை வேலை செய்யும். சற்று தடிமனான அடுக்கு தோலின் மீது அளிக்கப்படும்.
 • செயல்படுத்த தேவையான சருமத்தினை கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற நிலையிலே இவை மேற்கொள்ளப்படும், இதன் மூலம் தேவையற்ற நோய் தொற்றுக்கிருமிகள் பரவாது.
 • உருளையின் மூலம் அனைத்து திசைகளிலும் சருமத்தினில் சமப்படுத்தப்படும். இது 15 முதல் 20 முறைகள் கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும், சாய்ந்த நிலையிலும் செய்யப்படும்.
 • சிகிச்சை முடிந்தபிறகு சிகிச்சை பெற்ற பகுதிகள் உப்பு பட்டைகளின் உதவியால் ஈரமாக்கப்படும்.
 • சிகிச்சை பெறும் சருமத்தினைப் பொருத்து இந்த சிகிச்சை செயல்முறை 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்படும்.
 • அனைத்து செயல்முறைகளும் முடிந்த பிறகு ஹையலூரோனிக் அமிலம் அல்லது புரோட்டீன் உருவாக்கத்தினை அதிகப்படுத்தும் காரணிகள் சருமத்தின் மீது அளிக்கப்படும். இதன் மூலம் கொலஜன் தூண்டல் நடைபெறும்.
 • இறுதியாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மெல்லிய தோலடுக்கு சருமத்தின் மீது செயல்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றவர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்.

நன்மைகள்தொகு

1. சருமத்தின் சொந்த கொலஜன் உருவாக்கம் தூண்டப்படும்

2. பக்க விளைவுகள் குறைவு

3. லேசர் இயந்திரம் தேவையில்லை

4. பெரிய இயந்திரங்கள் எதுவும் தேவையில்லை

குறிப்புகள்தொகு

 1. Cohen, BE; Elbuluk, N (5 November 2015). "Microneedling in skin of color: A review of uses and efficacy.". Journal of the American Academy of Dermatology. பப்மெட்:26549251. 
 2. Dermaroller GmbH official website
 3. "Dermaroller". drbatul.com. பார்த்த நாள் 13 April 2016.