கொல்லம்பரும்பு

கொல்லம்பரும்பு (Kollamparumbu), தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். ஆயிரத்திற்கும் (1000) க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இக்கிராமம் 'கொல்லம்பரும்பு ஊராட்சி' எனும் தனியான சிற்றூராட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பல்வேறு சமயங்களையும், குடிகளையும் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர்,புதிரை வண்ணார் , கவுண்டர் , வெள்ளாளர் ,ஆசாரியர், நாடார், அருந்ததியர், தெலுங்கு நாயுடு  ஆகிய குடிகளைச்சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள். வேளாண்மை இம்மக்களின் பாரம்பரியத் தொழில்.

கொல்லம்பரும்பு - பாமர மொழியில் கொல்லம்பரம்பு என அழைப்பர். முற்காலத்தில் இங்கு பொற்கொல்லர்கள் வாழ்ந்ததாகவும் - சிலர் கொல்லப்பட்டறைகள் இருந்ததாகவும் கூறுவர். இப்பகுதி முழுவதும் பரும்பு காடுகளால் சூழ்ந்துள்ளதால், கொல்லம்பரும்பு - கொல்லம்பரம்பு எனப்பேர் வந்ததென்பர்.

கொல்லம்பரும்பு ஊராட்சி (Kollamparumbu Grama Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 856 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 437 பேரும் ஆண்கள் 419 பேரும் உள்ளடங்குவர்.

ஊராட்சித்தலைவர்கள்

தொகு

தற்போதைய ஊராட்சித்தலைவர் (2021 - 2025):

திருமதி. கௌரி கருணாகரன் பி.இ.,பி.எட்.


வ.எண்
தலைவர்கள் ஆண்டு
1 திருமதி. வள்ளியம்மாள் 1996-2001
2 திருமதி. சந்திரா பெருமாள் 2001-2006
3 திருமதி. சந்திரா பெருமாள் 2006-2011
4 திருமதி. சந்திரா பெருமாள் 2011-2016
5 தேர்தல் நடைபெறவில்லை 2016- 2020
6 திருமதி. சந்திரா பெருமாள் 2020- டிசம்பர் 2020
7 திருமதி.கௌரி கருணாகரன் அக்டோபர் 2021 - 2025

உள்ளாட்சி மன்ற அமைப்பு :

தொகு

இவ்வூர் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் போன்ற நகரங்களுக்கு அருகில் இருந்தாலும் , விளாத்திகுளம் தான் இதன் சட்டசபை தொகுதியாகும் .

வ.எண் அமைப்பு இடம்
1. ஊராட்சி கொல்லம்பரும்பு
2. அஞ்சலகம் வேடநத்தம்
3. வட்டம் ஓட்டப்பிடாரம்
4. ஒன்றியம் ஓட்டப்பிடாரம்
5. சட்டசபை தொகுதி விளாத்திகுளம்
6. நாடாளுமன்ற தொகுதி தூத்துக்குடி
7. மாவட்டம் தூத்துக்குடி
8. அஞ்சல் குறியீடு 628722


முக்கிய வேளாண்விளைபொருட்கள்

தொகு
நன்செய் பயிர்கள் புன்செய் பயிர்கள் பிற பயிர்கள்
நெல் மிளகாய் ,கடலை ஆமணக்கு , பாகற்காய்
குட மிளகாய் அவரை, துவரை பருத்தி , கொண்டைக்கடலை
வெங்காயம் அவுரி , எள் கத்தரி, வெண்டை

பிறதொழில்கள்

தொகு

வேளாண் தொழில் இம்மக்களின் முதன்மைத்தொழிலாக இருப்பினும் , வேறு பல தொழில்களையும் செய்கிறார்கள். முதியவர்கள் பெரும்பாலும் ஆடு, மாடு வளர்த்தலில் ஈடுபடுகிறார்கள். இளைஞர்களில் பலர் கட்டிடத்தொழில்(கொத்தனார்),ஓட்டுனர்,கப்பல்களில் சுமை தூக்கி போன்ற வேலைகளிலும் , சிலர் வெளியூர் சென்று அலுவலக வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய ஆட்சி பணியாளர் , மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் , அரசு உயர் அதிகாரிகள் என்று பலர் இக்கிராமத்தில் பிறந்து , இங்கேயே படித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிகொண்டிருகிறார்கள்.

நீர் ஆதாரங்கள்

தொகு

நஞ்சை குளம் ,குடிநீர் குளம் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை இக்கிராமத்தின் நீர் ஆதாரங்களாக உள்ளன . தமிழ்நாடு குடிநீர் வாரியத்தால் நிர்மாநிக்கக்ப்பட்ட ஐம்பதாயிரம் கன அளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியிலிருந்து கிராமத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய்கள் மூலம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்கள்/மையங்கள்

தொகு

(1)ஊராட்சி மன்ற அலுவலகம்

(2)கிராம நிர்வாக அலுவலகம்

(3)நியாய விலை அங்காடி

கல்விக்கூடங்கள்/ சமூக மையங்கள்

தொகு

(1)றி.டி.றி.ஏ நடுநிலைப்பள்ளி

(2)ஊட்டச்சத்து மையம்

(3)திருவள்ளுவர் நூலகம்

(4)உடற்பயிற்சியகம்

(5)மகளிர் மன்றக்கூடம்

கோயில்கள் /தேவாலயங்கள்

தொகு

வேளாண் மக்கள் பெரிதும் விரும்பி வணங்கும் தெய்வங்களாக அய்யனார் , சந்தன மாரியம்மன் ஆகியோர் விளங்குகின்றனர் . இம்மக்கள் இத்தெய்வங்களுக்கு கோட்டைகளுடன்கூடிய கோயில்களை எழுப்பியுள்ளனர் . மேலும் , வேளாண் பண்ணைகளும் , வேறு சிலரும் பெருமாள் போன்ற வைணவ தெய்வத்தையும் வணங்கிவந்துள்ளனர் . பெருமாளுக்கு இங்கு கற்றுளி தூணோடுகூடிய கற்கோயில் எழுப்பியுள்ளனர்.இவ்வூரில் எழுந்தருளியுள்ள கடவுளர் கோயில்களில் பெருமாள் கோயிலும் , அய்யனார் கோயிலும் தான் மிகப்பழமையானவையாகும்.

இங்கு கிருத்தவ மக்களும் கணிசமாக வாழ்கிறார்கள் . கத்தோலிக்க, இந்திய திருசபை மற்றும் சுதந்திரசபைகூடங்கள் இங்கு செயல்படுகிறது . இங்குள்ள கிறித்தவ மக்களுக்கும் , பிற தமிழ் சமய மக்களுக்கும் வேறுபாடுகாணவியலாது .

சில சமுதாய மக்கள் , பத்திரகாளியம்மனை காக்கும் தெய்வமாகக்கருதி கோயில் கட்டி வழிபடுகின்றனர் . பத்திரகாளிக்கென்றே தனிப்பெரும் கோயில் இங்குள்ளது . இக்கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்களெல்லாம் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்ந்து வருகிறார்கள் . இவர்கள் வருடத்திற்கொருமுறை தங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து இபத்திரகாளியம்மனுக்கு கொடை (திருவிழா ) எடுக்கிறார்கள் . இது தவிர ஆச்சாரியார்கள் 2012ம்ஆண்டு முதல் விஸ்வராஜகணபதி ஆலயம் அமைத்து வழிபாடு செய்து கொண்டு வருகின்றனர் இதுதவிர கருப்பசாமி , மாடசாமி , சுடலைமாட சாமி , வைரவன் , முத்தாலம்மன் , ஒன்னமத்தம்மன் போன்ற எல்லை காக்கும் தெய்வங்களையும் வணங்குகின்றனர் .

இவ்வளவு கோயில்கள் இருந்தாலும் பகுத்தறிவு பேசும் மக்களும் இங்கு மிகுதியே .

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லம்பரும்பு&oldid=3307242" இலிருந்து மீள்விக்கப்பட்டது