கொல்லிப் போர்
கொல்லிப் போர் என்பது கொல்லிமலையில் நடந்த போராகும் இப்போர் ஓரிக்கும், காரிக்கும் நடந்தது இப்போரில் காரி சேரமான் சார்பாக போரிட்டதாக கருதப்படுகிறது. இப்போரில் வல்வில் ஓரியைக் கொன்று அந்த மலையை சேரமானுக்கு காரி வழங்கினான்.[1] ஓரி இறந்தபின்னும் கொல்லிமலையில் பெரும் போர் ஒன்று நடந்து என்பதை
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேல் தானை அதிகமானொடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசும் குடையுங் கலனுங் கொண்டு
[2]
என்று பதிற்றுப்பத்து தெரிவிக்கிறது. இப்போரில் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையை எதிர்த்து அதியமான் நெடுமானஞ்சியும் இரு பெரும் வேந்தர்களாகிய சோழனும், பாண்டியனும் இணைந்து போரிட்டனர். பெருஞ்சேரல் இரும்பொறை இம்மூவரையும் வென்று அவர்தம் முரசு, குடை, கலன் ஆகியவற்றைக் கைப்பற்றினான். [3]