கோகிலா மகேந்திரன்
கோகிலா மகேந்திரன் (கோகிலாதேவி மகேந்திரராஜா பிறப்பு: 17 நவம்பர் 1950) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம் என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகள் பலவற்றில் இடம் பிடித்திருக்கின்றன.
கோகிலா மகேந்திரன் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 17, 1950 தெல்லிப்பழை, விழிசிட்டி, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் |
கல்வி | தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம் |
பணி | ஆசிரியர், அதிபர், பிரதிக்கல்விப்பணிப்பாளர் |
அறியப்படுவது | எழுத்தாளர், நாடக நெறியாள்கையாளர், உளவள ஆலோசகர் |
பெற்றோர் | சிவசுப்பிரமணியம், செல்லமுத்து |
பிள்ளைகள் | பிரவீணன் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஇவர் தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் தெல்லிப்பழை சைவப்பிரகாசவித்தியாசாலையில் அதிபராகப் பணி புரிந்தவர். சமய எழுத்துக்காக சாகித்திய விருது பெற்றவர். தாயார் செல்லமுத்து. இவர் 1976 இல் திருமணம் செய்து கொண்டார். கணவர் கிருஸ்ணர் மகேந்திரராஜா அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் அதிபராகப் பணி புரிந்தவர். மகன் பிரவீணன்.
கோகிலா மகேந்திரன் பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் (விழிசிட்டி சிவஞான வித்தியாசாலை) ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் உயிரியல் துறையில் உயர் கல்வியைக் கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி. இவர் 1974 இல் யாழ்ப்பாணம் பொலிகண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் ஒரு விஞ்ஞான ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயம், தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றிலும் கற்பித்து, 1994 இல் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி, 1999 இல் வலிகாமம் கல்விவலயப் பிரதிக்கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றவர்.
கல்வித்துறைக்குச் சமாந்தரமாக உளவியல் பற்றியும், உளவளத்துணை பற்றியும், மனவடுவுக்கு அளிக்கப்படும் உளச்சிகிச்சை பற்றியும் கற்றவர். அரச பணியில் இருந்த காலத்திலேயே எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு நாடகத் துறையையும் முறையாகக் கற்று நாடக ஆசிரியர் தரப் பரீட்சையில் தேர்வு பெற்வர். இவர் 2007 இல் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
எழுத்துலக வாழ்வு
தொகுஇவர் க.பொ.த சாதரண தரத்தில் படிக்கும் போது "மலர்களைப் போல் தங்கை" என்ற குறுநாவலை எழுதினார். அது எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை. 1972 இல் "குயில்" சஞ்சிகையில் பிரசுரமான 'அன்பிற்கு முன்னால்' என்ற சிறுகதையே அச்சில் வெளிவந்த இவரது முதலாவது படைப்பாகும். தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். இவரது கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆறு சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் "பிரசவங்கள்', "வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்' ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்ய விருது பெற்றவை.
இவர் "சிறுவர் உளநலம்", "மகிழ்வுடன் வாழ்தல்", "சின்னக் சின்னப் பிள்ளைகள்," "உள்ளக் கமலம்", "முற்றத்தில் சிந்திய முத்துக்கள்", "சுனாமியில் சிதறிய சித்திரங்கள்" ஆகிய உளவியல் பயிற்சி சார் கைநூல்களின் நூலாசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். அத்தோடு "மனதைக்கழுவும் மகாசமர்த்தர்கள்", "தண்பதப் பெருவழி" ஆகிய உளவியல் சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியராகவும் இருந்ததுடன் "சிறுவர் பாதுகாப்பு" என்ற உளவியல் கட்டுரைத் தொகுப்பினதும் வாழ்வின் முன்னேற்றத்துக்கான கற்றல் என்ற கல்வி உளவியல் பயிற்சிக் கைநூலினதும் ஆசிரியர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். "திருப்பங்கள்" என்ற குறுநாவலின் ஆசிரியர்களில் ஒருவரான இவர் அதன் பதிப்பாசிரியரும் ஆவார். இவர் "மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும்" என்ற சரித்திர நூல், "கலையும் வாழ்வும்" நூல், "விழிமுத்து", "விழிசைச் சிவம் ஜனன நூற்றாண்டு மலர்" ஆகியவற்றின் தொகுப்பாசிரியர். "தங்கத்தலைவி", "விழிசைச் சிவம்" ஆகிய தனிமனித ஆளுமை சார் நூல்களின் ஆசிரியர். இவர் "பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை சிறு நூல்" போன்றவற்றையும் வெளியிட்டுள்ளார். இவரது 60ஆவது, 65ஆவது, 70ஆவது அகவை நிறைவாகச் "சோலைக்குயில்", "விழிசைக் குயில்", "மாங்குயில்" ஆகிய மலர்கள் வெளிவந்துள்ளன.
நாடகவுலக வாழ்வு
தொகுஇவர் 23 நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். ஆறு நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்ததோடு தானும் நடித்துள்ளார். இரண்டு நாடகங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். வானொலி நாடகங்களையும் எழுதிய இவர் மாணவப் பருவத்தில் ஆசிரியர்களின் நெறியாள்கையில் ஐந்து நாடகங்களில் நடித்துள்ளார். "குயில்கள்" என்ற நூல் இவர் எழுதிய சில நாடகங்களின் தொகுப்பு. "கோலங்கள் ஐந்து" என்ற நாடகத் தொகுதியின் நூலாசிரியர்களில் இவரும் ஒருவர். "கேள்விகளின் முழக்கம்' எனும் இவரது நாடகம், வட இலங்கைச் சங்கீத சபையின் "நாடக கலாவித்தகர்' என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தது.
வானொலியில்
தொகுஇலங்கை வானொலியில் பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேணில் போன்ற வானொலி சார் நிகழ்வுகள் பலவற்றில் இவர் பங்கு பற்றியுள்ளார். "சைவநற்சிந்தனை” என்ற தொடரில் ஒலித்த இவரது குரல் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
வெளிவந்த நூல்கள்
தொகுசிறுகதைகள்
தொகு- மனித சொரூபங்கள்
- முரண்பாடுகளின் அறுவடை
- பிரசவங்கள்
- வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்
- முகங்களும் மூடிகளும் (2005)
- வரிக்குயில்
நாவல்கள்
தொகு- துயிலும் ஒருநாள் கலையும்
- தூவானம் கவனம்
- சந்தனச் சிதறல்கள்
உள சமூகக் கட்டுரைத் தொகுதிகள்
தொகு- எங்கே நிம்மதி
- மனக்குறை மாற வழி
- மனமெனும் தோணி (உளவியல் கட்டுரை)
- மனச்சோர்வு
- உள்ளம் பெருங்கோயில்
- பதின்மவயதுப் பிரச்சினைகளும் அவற்றைக் கையாளுதலும் (நினைவுப்பேருரை)
- திருமனிதர்வாழ்வு
உளவியல் சார் புனைவுச் சரிதை
தொகு- உள்ளத்துள் உறைதல்
சிறுவர் விஞ்ஞானப் புனைவுகள்
தொகு- விஞ்ஞானக் கதைகள்
- அறிவியல் கதைகள்
புலப்பெயர்வு சார் புனைவுகள்
தொகு- புலச்சிதறல் நெஞ்சம்
பெண்ணிய உளவியல் சார் தொகுப்பு
தொகு- நேர்கொண்ட பாவை
விசேட உளவளத்துணை சிகிச்சை முறைகள்
தொகு- சீர்மியத்தில் சிறப்பு முறைகள்
பெற்றோரியம்
தொகு- குடும்பம் ஒரு கதம்பம் [1]
மற்றைய நூல்கள்
தொகு- Child Mental health
- உள்ளக் கமலம்
- கலைப்பேரரசு ஏ.ரி.பி - அரங்கக் கலையில் ஐம்பதாண்டு (தனிமனித ஆளுமையும் நாடகமும் தொடர்பான நூல்)
- கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு (நாடக அறிமுறை நூல்)
- குயில்கள்
- சிறுவர் உளநலம்
- சின்னச் சின்னப் பிள்ளைகள்
- தங்கத் தலைவலி
- பாவலர் துரையப்பா பிள்ளை
- மகிழ்வுடன் வாழ்தல்
- மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும்
- முற்றத்தில் சிந்திய முத்துக்கள்
- விழி முத்து
எழுதி நெறியாள்கை செய்த நாடகங்கள்
தொகுபரிசு பெற்ற நூல்கள்
தொகு- குயில்கள் - தேசிய இலக்கியப்பேரவை
- முகங்களும் மூடிகளும் - தேசிய இலக்கியப்பேரவை
- உள்ளம் பெருங்கோயில் - எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
- நேர்கொண்ட பாவை - தமிழ் இலக்கிய நிறுவகம்
விருதுகள்
தொகுசாகித்ய இலக்கிய விருது பெற்ற நூல்கள்
தொகு- பிரசவங்கள் (சிறுகதைத்தொகுதி - 1986)
அரசு இலக்கிய விருது பெற்ற நூல்கள்
தொகு- வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி - 1997)[2]
அரசு இலக்கிய விருதுக்காக விதந்துரைக்கப்பட்ட நூல்கள்
தொகு- புலச்சிதறல் நெஞ்சம் (2014)
- நேர்கொண்டபாவை (2016)
- திருமனிதர்வாழ்வு (2018)
வடகிழக்கு மாகாண இலக்கிய விருது பெற்ற நூல்கள்
தொகு- வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்
வடக்கு மாகாண இலக்கிய விருது பெற்ற நூல்கள்
தொகு- மனமெனும் தோணி (2008)
- குடும்பம் ஒரு கதம்பம் (2023)
விசேட விருதுகள்
தொகு- கொடகே தேசிய இலக்கிய விருது (2009)[3] [4]
- தமிழியல் விருது - எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (2010)
- முதலமைச்சர் விருது - பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம் (2014)[5]
- .மூத்த நாடக எழுத்தாளர் விருது - றோயல் கல்லூரித் தமிழ் மன்றம் -கொழும்பு (2015)
- ரூப ராணி ஜோசப் நினைவு இலக்கிய விருது - மக்கள் கலை இலக்கிய மன்றம் -கண்டி (2017)
- .ஐ .பி .சி தமிழ் பன்முக ஆளுமை விருது (2019)
- .Inspirational woman விருது - மகளிர் விவகார அமைச்சு - வடமாகாணம் (2019)
- மகாஜனா விழுது விருது - பழைய மாணவர் தாய்ச் சங்கம் (2019)
- சிவத்தமிழ் விருது - சிவத்தமிழ்ச் செல்வி அறநிதியச் சபை- தெல்லிப்பழை (2020)
- குறமகள் ஞாபகார்த்த ,பல்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது - வென்மேரி அறக்கட்டளை (2022)
- அரச கேசரி விருது - இயல் துறை - யாழ் மாநகர சபை (2023)
- வாழ்நாள் சாதனையாளர் விருது - இரா .உதயணன் இலக்கிய நிறுவகம் (2023)
- தமிழ் வித்தகர் விருது - சைவப்புலவர் செல்லத்துரை அறக்கட்டளை (2024)
கெளரவப் பட்டங்கள்
தொகு- இலக்கிய வித்தகர் - இந்துசமய ,தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சு (1986)
- கலைச்சுடர் - வலிவடக்குப் பிரதேச செயலகம் (2004)[6]
- சமூக ஒளி - கத்தோலிக்கக் கலை இலக்கிய வட்டம் (2010)
- கலாபூசணம் - இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் (2014)
- சமூக திலகம் - கொட்டடி சனசமூக நிலையமும், கிராம அபிவிருத்திச் சங்கமும் (2016)[7] [8]
- கலைப்பிரவாகம் - வட இலங்கைச் சங்கீத சபை (2017)[9]
- திருமுறை நெறிச்செல்வர் - திருவாவடுதுறை ஆதீனம் (2018) [10]
- செம்புலத்திருமகள் - சுன்னாகம் சிவன் சிறுவர் கழகம் (2023)
- கலா வித்தகர் விருது - வட இலங்கைச் சங்கீத சபை (10.03.2002) [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ நூல் வெளியீடு
- ↑ ம. கோகிலாதேவி எழுதிய "வாழ்வுக்கு வலைப்பந்தாட்டம்" எனும் நூலிற்கு அரச இலக்கிய விருது வழங்குவதற்கான கடிதமும் அதனை உறுதிப்படுத்தும் சான்றிதழும்
- ↑ கொடகே தேசிய விருதுடன் கோகிலா மகேந்திரன் அவர்கள்
- ↑ 2009 ஆம் ஆண்டு கொடகே தேசிய விருது கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட போது
- ↑ கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்
- ↑ கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு கலைச்சுடர் எனும் பட்டம் வழங்கிக் கெளரவிப்பட்டதற்கான சான்றிதழ்
- ↑ கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு சமூக திலகம் விருது வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்
- ↑ சமூக திலகம் விருது கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்ட போது
- ↑ கலைப் பிரவாகம் விருது கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு வழங்கிய போது
- ↑ திருமுறை நெறிச்செல்வர் பட்டம் கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு வழங்கிய போது
- ↑ கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு "கலா வித்தகர்" விருது வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்