கோசலா தேவி
கோசலா தேவி, மகதப் பேரரசின் அரசியாக பிம்பிசார பேரரசரின் (கிமு 558-491) முதல் மனைவியாக இருந்துள்ளார். கோசல அரசாங்கத்தின் காசியின் இளவரசியாகப் பிறந்த இவர் பிரசேனஜித் மன்னரின் சகோதரி ஆவார். இவருடைய இயற்பெயர் பத்ரா-ஸ்ரீ என்பதாகும். [1]
கோசலா தேவி | |
---|---|
மகத நாட்டின் பேரரசி | |
துணைவர் | பிம்பிசாரன் |
குழந்தைகளின் பெயர்கள் | அஜாதசத்ரு |
அரசமரபு | ஹரியங்கா (திருமணத்தின் மூலம்) இக்ஷ்வாகு (பிறப்பின் மூலம்) |
தந்தை | மகா கோசல மன்னன் |
மதம் | பௌத்தம் |
வாழ்க்கை
தொகுகோசல மன்னன் மஹா-கோசலனுக்கு மகளாகப் பிறந்தவர் கோசல தேவி. அமகா கோசலனுக்கு பின்பாக மன்னனாக பொறுப்பேற்ற பிரசேனஜித்தின் சகோதரியுமாவார். பிம்பிசார மன்னனை மணந்து. அதற்க்கு வரதட்சணையாக காசி நகரத்தையே கொண்டுவந்து. [2] அவனுடைய முதன்மை ராணியானாள். அதன்படி மகதப் பேரரசின் அரசியாகவும் ஆனார்.
பிம்பிசாரருக்கும் கோசாலைக்கும் பிறந்தவர் தான்அஜாதசத்ரு என பௌத்த புராணக்கதைகள் சொல்லுகின்றன. ஆனால் [3] ஜெயின் பாரம்பரியமோ அஜாதசத்ருவை பிம்பிசாரரின் இரண்டாவது மனைவியான செல்லனாவின் மகனாக சொல்லிவருகிறது . [4] பசேனடியின் (பிரசென்ஜித்) மகளும், கோசலையின் மருமகளுமான, இளவரசி வஜிரா, அஜாதசத்ருவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். [5]
தனது கணவர் பிம்பிசரர், இத்தம்பதியரின் சொந்த மகனான அஜாதசத்ருவின் கைகளாலேயே இறப்புண்டதால் மனமுடைந்து, பேரரசி கோசலா தேவி அவரது கணவர் மீது கொண்ட அன்பினாலும் துக்கத்தினாலும் சதியை ஏற்று இறந்ததாகக் கூறப்படுகிறது. அஜாதசத்ரு பின்னர் காசி மீது படையெடுத்தார்.
மேற்கோள்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Cbeta 線上閱讀".
- ↑ Upinder Singh 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-03-14.
- ↑ Rapson, Edward James (1955). The Cambridge History of India. CUP Archive. p. 183.
- ↑ Hemchandra, Raychaudhuri (2006). Political History Of Ancient India. Genesis Publishing. p. 170.Hemchandra, Raychaudhuri (2006). Political History Of Ancient India. Genesis Publishing. p. 170.