கோசுடென்கோ சுரங்கப் பேரழிவு
கோசுடென்கோ சுரங்கப் பேரழிவு (Kostenko mine disaster) என்பது 28 அக்டோபர் 2023 அன்று காலை, கசக்கஸ்தானின் கரகண்டா பிராந்தியத்தில் உள்ள கோசுடென்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தைக் குறிக்கிறது. இந்தத் தீவிபத்தில் 46 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு சுரங்கத் தொழிலாளர்களைத் தேடும் பணி தொடர்கிறது. 20 பேர் காயமடைந்தனர். பூமிக்கடியில் மீத்தேன் வாயு வெடித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.[1] கசக்கஸ்தானின் அதிபர், காசிம்-சோமார்த்து டோகாயேவு சுரங்கத்திற்குச் சொந்தமான ஆர்சிலர் மிட்டல் டெமிர்டாவு நிறுவனத்துடனான அனைத்து முதலீட்டையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். கசக்கஸ்தானில் அக்டோபர் 29 தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.
பின்னணி
தொகுகோசுடென்கோ சுரங்கம் என்பது ஆர்சிலர் மிட்டல் டெமிர்டாவ் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கமாகும். இது கசக்கஸ்தானில் மிகப்பெரிய உலோகவியல் ஆலையைக் கொண்டுள்ளது. மேலும், 15 நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இரும்புத் தாது சுரங்கங்களைக் கொண்டுள்ளது. 1990 களின் நடுப்பகுதியில் இருந்து, இது சர்வதேச எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆர்சிலர் மிட்டல் டெமிர்டாவ் வளாகத்தில் 15 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆர்சிலர் மிட்டல் டெமிர்டாவ் தனது முதலீட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியுற்றுள்ளது. உபகரணங்களை நவீனமயமாக்குதல் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகள் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கோசுடென்கோ சுரங்கத்தில் தீ ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, மற்றொரு ஆர்சிலர் மிட்டல் டெமிர்டாவ் சுரங்கமான கசக்கஸ்தான்ஸ்காயா சுரங்கத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது, இதன் விளைவாக ஐந்து பேர் இறந்தனர். கசக்கஸ்தான்ஸ்காயாவில் நடந்த விபத்திற்குப் பிறகு, கசக்கஸ்தான் அதிகாரிகள் இந்த சுரங்க செயல்பாட்டை தேசியமயமாக்குவது மற்றும் கசக்கஸ்தானில் இருந்து நிறுவனத்தை அகற்றுவதற்கான அரசியல் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டதாகக் கூறினர்.[2]
விபத்து
தொகு28 அக்டோபர்
தொகுகோசுடென்கோ சுரங்கத்தில் அல்மா-அடா நேரத்தில் 02:33 மணிக்கு, சுமார் 700 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஒரு மட்டத்தில் தீ ஏற்பட்டது. விபத்தின் போது, 252 பேர் சுரங்கத்தில் இருந்தனர், அவர்களில் 205 பேர் மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டனர். 18 பேர் மருத்துவ உதவி பெற்றனர். ஆரம்பத்தில், நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் மூன்று சடலங்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. காயமடைந்தவர்களில் 15 பேர் கார்பன் மோனாக்சைடு நச்சினை அனுபவித்திருப்பர்.
14:00 மணியளவில், 22 சுரங்கத் தொழிலாளர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு தொழில்முறை இராணுவ மீட்பு சேவை அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவியது. [3] 16:00 மணியளவில், இறப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. [4]
அன்றிரவு, கரகண்டாவில் ஒரு விளக்கக்கூட்டம் நடைபெற்றது, இதுவரை கண்டுபிடிக்கப்படாத 13 பேர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், நிலக்கரி உலையில் ஏற்பட்ட தீ விபத்துக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட எரிவாயு வெடிப்பின் விளைவாக அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. [5] 19:00 மணியளவில், தீ அணைக்கப்பட்டது. மீட்புப் பணிக்கான பாதுகாப்பினைக் கொண்டதாக சுரங்கம் இருந்தது. மீட்கப்பட்ட உடல்களின் மோசமான நிலை அவர்களை அடையாளம் காண்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. [6]
29 அக்டோபர்
தொகுகாலையில், மீட்புப் படையினர் மேலும் நான்கு உடல்களைக் கண்டுபிடித்தனர், இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஐ எட்டியது. 29 உடல்கள் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டன, மேலும் 11 பேரைக் காணவில்லை. 14:00 மணியளவில், இறந்த சுரங்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 38 பேரை எட்டியது. சுரங்கத்தில் இருந்து 9 பேர் காணாமல் போயினர். 15:00 மணியளவில், இறந்த 42 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் நான்கு சுரங்கத் தொழிலாளர்களைத் தேடும் பணி தொடர்ந்தது. 17:00 மணிக்கு, கண்டுபிடிக்கப்பட்ட எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது.
பின்விளைவு
தொகுவிபத்துக்கான காரணங்களை கண்டறிய அரசினால் ஆணையம் அமைக்கப்பட்டது. கசக்கஸ்தானின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், கசக்கஸ்தானின் குற்றவியல் குறியீடு பிரிவு 277 இன் பகுதி 3 இன் கீழ் ஒரு குற்றவியல் வழக்கைப் பதிவு செய்தது (சுரங்க அல்லது கட்டுமானப் பணியின் போது பாதுகாப்பு விதிகளை மீறுதல்). டோகாயேவ் சுரங்கத்தைப் பார்வையிட்டார் மற்றும் நிறுவனத்துடனான அனைத்து முதலீட்டையும் நிறுத்த உத்தரவிட்டார். [7] கசக்கஸ்தானில் அக்டோபர் 29 தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. [7] [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "В шахте им.Костенко в Казахстане нашли тела 28 погибших при пожаре горняков" (in ரஷியன்). Interfax. 2023-10-28. Archived from the original on 2023-10-28. பார்க்கப்பட்ட நாள் 2023-10-28.
- ↑ "В Казахстане более 30 человек погибли в результате пожара в шахте", BBC News Русская служба (in ரஷியன்), 2023-10-28, பார்க்கப்பட்ட நாள் 2023-10-30
- ↑ "ЧП НА ШАХТЕ ИМ. КОСТЕНКО: ХРОНОЛОГИЯ ПРОИСШЕСТВИЯ" (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-28.
- ↑ "Қарағандыдағы шахтадағы жарылыс" (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
- ↑ "Костенко шахтасындағы апат: 33 адамның денесі табылды, 13 кенші іздестіріліп жатыр" (in kk). Radio Free Europe/Radio Liberty. 2023-10-28. https://www.azattyq.org/a/32657859.html. பார்த்த நாள்: 2023-10-28.
- ↑ "Шахтадағы апат: Мерт болған кеншілердің жеке басын анықтау қиынға түсуде" (in கசாக்). kazinform. 2023-10-28. பார்க்கப்பட்ட நாள் 2023-10-28.
- ↑ 7.0 7.1 "Что известно о пожаре на шахте в Караганде". TASS. 2023-10-28. பார்க்கப்பட்ட நாள் 2023-10-28.
- ↑ "В Казахстане 29 октября будет днем траура в связи с гибелью людей на шахте". Interfax. 2023-10-28. பார்க்கப்பட்ட நாள் 2023-10-28.