கோச்டாநெக்கி அசைலேற்ற வினை

கோச்டாநெக்கி அசைலேற்ற வினை (Kostanecki acylation, கோஸ்டானெக்கி அசைலேற்றம்) என்பது O-ஐதொராக்சிஅரைல் கீட்டோன்கள் அலிஃபாட்டிக் அமிலநீரிலிகளுடன் சேர்ந்து அசைலேற்றமும் அதைத் தொடர்ந்து வட்டமாக்கலும் நிகழும் கரிமத் தொகுப்பு வினையாகும். இம்முறையின் மூலமாக குரோமோன்கள் அல்லது குமாரின்கள் தயாரிக்கப்படுகின்றன[1].

வினை வழிமுறை

தொகு

வினைவழிமுறை மூன்று தனித்தறியப்பட்ட வினைகளை உள்ளடக்கியது:[2][3].

1) ஃபீனால் O-அசைலேற்றம் - இடைநிலை நாற்பட்டகச் சமசீர்மை உருவாக்கம்.
2) மூலக்கூறக அலுடோலொடுங்கல் – ஐதொராக்சி இருஐதரோ குரோமோன் உருவாக வட்டமாக்கல் நிகழ்வு.
3) ஐதொராக்சில் குழு நீக்கம் – குரோமோன் அல்லது குமாரின் உருவாக்கம்.
 

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. v. Kostanecki, St.; Różycki, A. (1901). "Ueber eine Bildungsweise von Chromonderivaten". Berichte der deutschen chemischen Gesellschaft 34: 102. doi:10.1002/cber.19010340119. 
  2. Mamedov, V. A.; Kalinin, A. A.; Gubaidullin, A. T.; Litvinov, I. A. (2003). Chemistry of Heterocyclic Compounds 39: 96. doi:10.1023/A:1023028927007. 
  3. Ellis, G. P. (1977) Chromenes, Chromanones, and Chromones from The Chemistry of Heterocyclic Compounds, Weissberger, A. and Taylor, E. C., eds.; Wiley & Sons: New York, vol. 31, p. 495.