கோடுத் தாண்டவம்

கோடுத்தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களில் ஒன்றாகும். சிவபெருமான் கபலத்துடன் ஆடிய தாண்டவமாதலின் இது கபால தாண்டவம் என்றும், சிவபெருமான் கபாலி என்றும் அழைக்கப்பட்டுகிறார்.

தாண்டவக் காரணம்

தொகு

சிவபெருமான் மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால், உருத்திரன் ஆகியோரை படைத்தார். அப்பொழுது பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமானும், தன்னைப் போலவே ஐந்து தலைகளுடன் இருப்பதைக் கண்ட பிரம்மா தன்னையும் சிவபெருமானுக்கு நிகராக நினைத்தார். அதனால் பிரம்மாவிற்கு ஆணவம் வந்தது.

ஆணவத்தினை அடக்குபவரான சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை கொய்தார். அந்த கபாலத்துடன் (தலையுடன்) சிவபெருமான் ஆடிய தாண்டவம் கோடுத்தாண்டவமாகும்.

கருவி நூல்

தொகு

சைவ மரபும் மெய்ப்பொருளியலும் நூல் பி. ஆர். நரசிம்மன் - பகுதி சிவதாண்டவத்தின் மெய்ப்பொருளியல் கோட்பாடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடுத்_தாண்டவம்&oldid=1456793" இலிருந்து மீள்விக்கப்பட்டது