கோணங்குப்பம் பெரியநாயகி அன்னை தேவாலயம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோணங்குப்பம் பெரியநாயகி அன்னை தேவாலயம் என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையை அடுத்துள்ள கோணங்குப்பம் என்னும் சிற்றூரில் உள்ள ஒரு மரியன்னை தேவாலயமாகும்.
வரலாறு
தொகுஇந்த ஆலயத்தை இப்பகுதி மக்கள் வழிபடுவதற்காக அம்மக்களின் ஒத்துழைப்போடு தமிழறிஞர் வீரமாமுனிவா் கட்டினார்.
சிறப்பு
தொகுவீரமாமுனிவா் தனது பணி வாழ்வில் கட்டிய கோவில்களில் முதல் கோவில் இது ஆகும். அன்னையின் திருவுருவச்சிலை தமிழ் கலாச்சாரத்தின் படி அமைய வேண்டுமென்றெண்ணி தமிழ் மரபுப்படி சேலை உடுத்தி ஆபரணங்கள் அணிந்து தலையில் கீாிடம் கொண்டு கையில் இயேசு பாலனை கையிலேந்திய வண்ணம் அன்னையின் படத்தினை வரைந்தாா். இச்சொரூபத்தினை பிலிப்பைன்சின், மணிலாவிலிருந்து கொண்டு வந்து பொியநாயகி எனப்பெயாிட்டாா். இச்சொரூபம் பத்து அடி உயரத்தில் மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- வெளியீடு: பங்குதந்தை,புனித பொியநாயகி அன்னை திருத்தலம்,கோணாங்குப்பம்