கோதாவரி விரைவுவண்டி
கோதாவரி விரைவுவண்டி (Godavari Express) இந்தியாவின் விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத்திற்கு இடையே செயல்படும் தொடருந்து சேவையாகும். இது தெற்கு மத்திய இரயில்களில் மிகவும் மதிப்புமிக்க இரயிலாகும். பிப்ரவரி 1, 1974-ல் வால்டையர் ஐதராபாத் விரைவுவண்டி என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இதன் வண்டி எண் 7007 மற்றும் 7008 ஆகும். இதன் தற்போதைய எண் 12727 மற்றும் 12728 ஆகும். இதன் இருக்கைகளில் முன்பதிவு செய்வதற்கு அதிகப்படியான கூட்டங்கள் அலைமோதும், அதிலும் முக்கியமாக குளிரூட்டும் சாதனம் உள்ள இரயில்பெட்டிகளுக்கு அதிகப்படியான வரவேற்பு உண்டு. இரு புதிய இரயில்கள் வெளியிடப்பட்டபோதிலும் கோதாவரி விரைவுவண்டியின் மதிப்பு குறையவில்லை.
கோதாவரி விரைவுவண்டி
தொகுசில சமயங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் கிளாசிக் படுக்கை அல்லது மூன்றாம் வகுப்பு கிளாசிக் படுக்கை போன்ற அதிகப்படியான பெட்டிகளால் மாற்றப்படும். இரு நகரங்களுக்கிடையே இது மிகவும் சிறப்பாகச் செயல்படுவதால் இதனை புவனேசுவரம் வரை நீட்டிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் சில அரசியல்வாதிகளும் இரு நகரங்களின் பயணிகளும் எதிர்த்ததால் புதிதாக விசாகா விரைவுவண்டி என்ற பெயரில் மற்றொரு இரயில் இயக்கப்பட்டது. இது பயணிகளின் பயண நேரத்தினையும் அதிகப்படுத்தியது.[1]
கோதாவரி விரைவுவண்டி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நான்கு கடலோர மாவட்டங்களை மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்துடன் இணைக்கிறது. கோதாவரி விரைவுவண்டி விசாகப்பட்டினம் மாவட்டத்தில் நான்கு நிலையங்களிலும், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆறு நிலையங்களிலும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மூன்று நிலையங்களிலும், கிருஷ்ணா மாவட்டத்தில் விஜயவாடாவிலும் நிறுத்தங்களைக் கொண்டுள்ளது.[2]
வரலாறு
தொகுபிப்ரவரி 1, 1974-ல் முதன் முதலாக விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு இடையே இரயில் சேவையினை அறிமுகப்படுத்தப்போவதாக இந்திய இரயில்வே அறிவித்தது. அப்போது இதன் பெயர் வால்டையர் ஐதராபாத் விரைவுவண்டி என்ற பெயருடன் செயல்படத் தொடங்கியது. தினசரி செயல்பட்டு வந்தச் சேவை விசாகப்பட்டினத்திலிருந்து மாலை 5.30 மணியளவில் புறப்படும், ஐதராபாத்தினை அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். பாலைவன நகரங்களான கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி பகுதியினைச் சேர்ந்த ஒன்பது நிலையங்களை இந்த இரயில் இணைப்பதால் இதன் பெயர் அலுவலக முறைப்படி, கோதாவரி விரைவுவண்டி என்று மாற்றப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இதன் எண் 12727 விஜயவாடா மற்றும் ஐதராபாத்திற்கு இடையில் நிறுத்தம் கொண்ட அதிவிரைவு இரயிலாக செயல்படத் துவங்கியது. இதன் பயண நேரம் மற்றும் கால அட்டவணை மாற்றப்பட்டு 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இதன் நிறுத்தங்கள் WAP 7 உதவியுடன் செய்யப்படுகிறது. இரயிலுக்கு விடுக்கப்பட்ட குண்டு எச்சரிக்கைகளின் காரணமாக, பலத்த பாதுகாப்புகள் வழங்கப்பட்டன. WAP 7 மூலம் விசாகப்படினத்திலிருந்து விஜயவாடா வரை சென்ற முதல் இரயில் இதுவாகும்.[3]
ஏப்ரல் 2 முதல் இதன் கட்டணத்தினை அதிகரிக்க இந்திய இரயில்வே முடிவு செய்தது. இதனால் இரண்டாம் வகுப்பு இருக்கையின் கட்டணம் 1058 ரூபாயில் இருந்து 1170 ரூபாய்க்கும், முதல் வகுப்பு இருக்கையின் கட்டணம் 1771 ரூபாயில் இருந்து 1990 ரூபாய்க்கும் அதிகரிக்கப்பட்டது.[4][5]
வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்
தொகுஎண் | நிலையத்தின் பெயர் (குறியீடு) | வரும் நேரம் | புறப்படும் நேரம் | நிற்கும் நேரம் (நிமிடங்கள்) |
கடந்த தொலைவு (கி.மீ) |
நாள் | பாதை |
---|---|---|---|---|---|---|---|
1 | விசாகப்பட்டினம் (VSKP) | தொடக்கம் | 17:25 | 0 | 0 | 1 | 1 |
2 | துவ்வாடா (DVD) | 17:53 | 17:54 | 1 | 18 | 1 | 1 |
3 | அனகாப்பள்ளி (AKP) | 18:08 | 18:09 | 1 | 34 | 1 | 1 |
4 | எலமஞ்சிலி (YLM) | 18:28 | 18:29 | 1 | 58 | 1 | 1 |
5 | நர்சிபட்னம் சாலை (NRP) | 18:43 | 18:44 | 1 | 76 | 1 | 1 |
6 | துனி (TUNI) | 18:59 | 19:00 | 1 | 98 | 1 | 1 |
7 | அன்னவரம் (ANV) | 19:13 | 19:14 | 1 | 114 | 1 | 1 |
8 | (பிட்டாபுரம்) பித்தாபுரம் (PAP) |
19:32 | 19:33 | 1 | 139 | 1 | 1 |
9 | சாமல்கோட் சந்திப்பு (SLO) | 19:45 | 19:46 | 1 | 151 | 1 | 1 |
10 | அனபர்த்தி (APT) | 20:05 | 20:06 | 1 | 178 | 1 | 1 |
11 | ராஜமுந்திரி (RJY) | 20:42 | 20:46 | 4 | 201 | 1 | 1 |
12 | நிடதவோலு சந்திப்பு (NDD) | 21:09 | 21:10 | 1 | 224 | 1 | 1 |
13 | தாடேபல்லிகூடெம் (TDD) | 21:27 | 21:28 | 1 | 244 | 1 | 1 |
14 | ஏலூரு (EE) | 22:01 | 22:02 | 1 | 291 | 1 | 1 |
15 | விஜயவாடா சந்திப்பு (BZA) | 23:40 | 23:55 | 15 | 351 | 1 | 1 |
16 | கம்மம் (T) | 01:13 | 01:15 | 2 | 452 | 2 | 1 |
17 | மகபூபாபாத் (MABD) | 01:54 | 01:55 | 1 | 499 | 2 | 1 |
18 | வாரங்கல் (WL) | 02:46 | 02:48 | 2 | 559 | 2 | 1 |
19 | காசிபேட் சந்திப்பு (KZJ) | 03:05 | 03:07 | 2 | 569 | 2 | 1 |
20 | செகந்திரபாத் சந்திப்பு (SC) | 05:45 | 05:50 | 5 | 701 | 2 | 1 |
21 | ஹைதரபாத் டெக்கன் (HYB) | 06:15 | முடிவு | 0 | 711 | 2 | 1 |
சர்ச்சைகள்
தொகுமார்ச் 30, 2012 அன்று கோதாவரி விரைவுவண்டியின் தோற்றம் சற்று வித்தியாசமாகக் காட்சியளித்தது. செகந்திரபாத் சந்திப்பில்[6] இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள கட்கேசருக்கு அருகில் இருக்கும்போது அதன் தோற்றம் மாறியிருப்பதை பயணிகள் கவனித்தனர். அதன்பிறகுதான் அந்த தோற்றம் கரூர் வைஸ்யா வங்கியின் விளம்பரப் படம் என்று தெரியவந்தது. விளம்பரங்களுக்கு அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் இவ்வாறு இரயிலின் தோற்றத்தையே மாற்றும் வகையில் அமைந்துள்ள விளம்பரம் தங்களை வரவேற்கும்[7] வண்ணம் இல்லை என்று பல பயணிகள் புகார் தெரிவித்தனர். 2013 ஆம் ஆண்டில் தொடரவண்டியை பழுதுபார்க்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டு பழைய தோற்றத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Move to extend Godavari Express up to Bhubaneswar opposed". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2 April 2012.
- ↑ "Godavari Express's stoppage on the Visakhapatnam - Vijayawada section". Indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2012.
- ↑ "Godavari SF Express a.k.a "The Prestigious train of SCR". Indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2 April 2012.
- ↑ "Raised railway fares become operational". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 April 2012.
- ↑ "Godavari Express". Cleartrip.com. Archived from the original on 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.
- ↑ "LGD WAP7 Godavari Express With a New livery". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2 April 2012.
- ↑ "Critical response to New Livery". Indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2012.