கோனேரிப்பட்டி

கோனேரிப்பட்டி, தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் கெங்கவல்லி தாலுகாவில் உள்ளது. அட்சரேகை 11.44 வ மற்றும் தீர்க்கரேகை 78.50 கி-இல் அமைந்துள்ளது. ஊரின் வடக்கே மலைத்தொடர்களும் தெற்கே ஏரியும் அமைந்துள்ளது. ஊரின் வடக்கே மேற்கிலிருந்து கிழக்காக சுவேதா என்னும் நதி கடந்து செல்கிறது. இங்கு நூற்றாண்டு சிறப்பு வாய்ந்த தூய சலேத் அன்னை ஆலயம் உள்ளது. வடக்கே லூர்து மாதா மலைக்கோவில் உள்ளது. இவ்வூரில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 99% மக்கள் கிருஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு ஒரு நடுநிலைப்பள்ளியும் ஒரு மழலையர் பள்ளியும் சிறிய மருத்துவமனையும் உள்ளது. கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டுகளில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வமும் வீரமும் மிக்கவர்களாக திகழ்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனேரிப்பட்டி&oldid=3566521" இலிருந்து மீள்விக்கப்பட்டது