கோபால் சிங் குவாமி
கோபால் சிங் குவாமி (Gopal Singh Qaumi) இந்தியாவைச் சேந்த ஒரு சமூகச் செயற்பாட்டாளர் ஆவார். குருத்வாரா சீர்திருத்த இயக்கத்தின் தீவிர உறுப்பினராக இவர் இருந்தார்.[2] சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் தலைவராக ஒரு நாள் மட்டுமே பணியாற்றினார், இது வரை இவ்வமைப்பின் மிகக் குறுகிய காலம் தலைவராக இருந்தவர் என்றும் அறியப்படுகிறார்.[3] சுதந்திரப் போராட்டத்தின் போது 13 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சைமன் கமிசன் புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கம், குரு கா பாக் மோர்ச்சா போன்ற இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்று சிறையில் 64 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். 1975 ஆம் ஆண்டு ஆக்த்து மாதம் 15 ஆம் தேதியன்று இந்திய அரசு இவருக்கு தாம்ரா பத்ரா விருது வழங்கி சிறப்பித்தது. சிரோமணி அகாலி தளத்தின் தலைவராகவும் கோபால் சிங் குவாமி இருந்தார்.[4] He also remained the President of Shiromani Akali Dal.[5] 1897 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார்.
கோபால் சிங் குவாமி Gopal Singh Qaumi | |
---|---|
பதவியில் 17 சூன் 1933 - 18 சூன் 1933 | |
சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு தலைவர்[1] | |
முன்னையவர் | தாரா சிங் |
பின்னவர் | பிரதாப் சிங் சங்கர் |
சிரோமணி அகாலி தளம் தலைவர் | |
முன்னையவர் | தாரா சிங் |
பின்னவர் | தாரா சிங் தியேட்டர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1897 |
இறப்பு | 1975 |
மேற்கோள்கள்
தொகு- ↑ SGPC former Presidents. Retrieved 29 April 2021.
- ↑ Akali Lehar de Mahan Neta (Punjabi). Book by Partap Singh, Giani 1976.
- ↑ Sikh political figures Partap Singh. www.thesikhencyclopedia.com. Retrieved 29 April 2021.
- ↑ Remembering visionary men of yore பரணிடப்பட்டது 2021-05-01 at the வந்தவழி இயந்திரம். 13 November 2020. The Tribune. Retrieved 29 April 2021.
- ↑ Past presidents. Shiromaniakalidal.com. Retrieved 13 May 2021.