கோபால் சைனி

இந்திய தடகள வீரர்

கோபால் சைனி (Gopal Saini) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] ஒரு முன்னாள் இந்திய நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார். 3000 மீட்டர் பலதடை ஓட்டம் விளையாட்டில் 37 ஆண்டுகளாக இவருடைய தேசிய சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது. 1981 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதியன்று சப்பான் நாட்டின் டோக்கியோவில் நடந்த 3000மீ பலதடை ஓட்டப் போட்டியில் 8:30.88 என்ற நேரக் கணக்கில் சைனி சாதனை படைத்தார். இச்சாதனையை அவினாசு சேபிள் 2018 ஆம் ஆண்டு புவனேசுவரில் நடந்த தேசிய திறந்த நிலை வெற்றியாளர் போட்டியில் 8:29.80 வினாடிகளில் கடந்து முறியடித்தார். பர்மிங்காமில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆகத்து மாதத்தில் 8:11.20 என்ற புதிய தேசிய சாதனையை சேபிள் படைத்தார். 1980 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 22 ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் சைனி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

கோபால் சைனிGopal Saini
தனிநபர் தகவல்
பிறப்பு1954 (1954)
இராசத்தான், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுஇடைத்தொலைவு ஓட்டம்

கோபால் சைனி இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சாதனைகளுக்காக 1981 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இவருக்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது. கால்களின் வலிமைக்காக நிலப்பரப்பில் பயிற்சி செய்தார். தற்போது பாரத மாநில வங்கியில் பணிபுரிகிறார். செய்ப்பூரில் ஒரு உணவகத்தையும் வைத்திருக்கிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Olympedia – Gopal Saini", www.olympedia.org, பார்க்கப்பட்ட நாள் 2023-12-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_சைனி&oldid=3842692" இலிருந்து மீள்விக்கப்பட்டது