கோபிகிருஷ்ணன்
கோபிகிருஷ்ணன் (Gopikrishnan) மதுரையில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர்.
உளவியல் துறையிலும் மற்றும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார்.
வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலவீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003ஆம் ஆண்டு காலமானார்.
ஆக்கங்கள்
தொகு- ஒவ்வாத உணர்வுகள்
- தூயோன்
- மானிட வாழ்வு தரும் ஆனந்தம்
- டேபிள் டென்னிஸ்
- உள்ளிருந்து சில குரல்கள்
- முடியாத சமன்
கோபிகிருஷ்ணன் அவர்களின் சில படைப்புகள் "அழியாச்சுடர்" தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவைகளுக்கான சுட்டி: http://azhiyasudargal.blogspot.com/search/label/கோபிகிருஷ்ணன்