கோப்திய கெய்ரோ
கோப்திய கெய்ரோ (Coptic Cairo) எனப்படுவது பழைய கெய்ரோவின் ஒரு அங்கமாகும். இது பாபிலோன் கோட்டை, கோப்திய அருங்காட்சியகம், தொங்கு தேவாலயம், புனித ஜோர்ஜின் கிரேக்கத் தேவாலயம் போன்ற கோப்திய தேவாலயங்களையும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் உள்ளடக்கியது. இப்பகுதிக்குத் திருக்குடும்பம் வந்துள்ளதாகவும் இங்கு தற்போது புனிதர்கள் செர்ஜியசு மற்றும் பச்சுசு தேவாலயம் உள்ள இடத்தில் தங்கியிருந்ததாகவும் நம்பப்படுகிறது.[1] தற்போதைய கட்டிடங்களும் தேவாலயங்களும் இசுலாமியர் கையகப்படுத்தலின் பின்னரே கட்டப்பட்டன எனினும் எகிப்தில் இசுலாமிய சகாப்தம் துவங்கும்வரை இப்பகுதி கிறித்தவக் கோட்டையாக விளங்கியது.[2]