கோப் வினை அல்லது கோப் நீக்கம் (Cope reaction or Cope elimination) என்பது ஆர்தர் சி. கோப் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு நீக்கல் வினையாகும். இவ்வினையில் மூவிணைய அமீனிலிருந்து ஓர் அமீன் ஆக்சைடை நீக்கி ஓர் ஆல்கீன் மற்றும் ஐதராக்சிலமீன் முதலியன தயாரிக்கப்படுகின்றன. கோப் வினையின் வினை வழிமுறையில் மூலக்கூறிடை 5 உறுப்பினர் வளைய இடைநிலை நிலை பங்கேற்கிறது [1] இதனால் ஒருபக்க நீக்க விளைபொருள் உருவாகிறது. இது மூலக்கூறிடை நீக்க வழிமுறையாகும். ஆப்மான் நீக்க வினையிலும் இக்கரிம வேதியியல் வினை இதே முடிவையே அளிக்கிறது [2]. ஆனால் நீங்கும் குழுவின் பகுதியே அடிப்படையாகும். தொடர்புடைய அமீனை மெட்டா குளோரோபெராக்சிபென்சாயிக் அமிலத்தைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்து அமீன் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இங்கு வெறும் வெப்பம் மட்டுமே நீக்கவினைக்கு அவசியமாகும்

கோப் வினை
பெயர் மூலம் ஆர்த்தர் சி.கோப்
வினையின் வகை நீக்கல் வினை
கோப் வினை
கோப் வினை

மெத்திலீன்வளையயெக்சேன் தொகுப்பது இவ்வினையின் பயன்பாடாகும்.[1]

தொகுப்பு முறையில் மெத்திலீன்வளையயெக்சேன் தயாரித்தல்

மூலக்கூற்றிடை கோப் வினையை பிப்பெரிடின்கள் தடை செய்கின்றன [2][3][4]. ஆனால், பிரோலிடின்களும், ஏழு மற்றும் ஏழைவிட அதிக எண்ணிக்கை வளையங்கள் கொண்ட சேர்மங்களும் இவ்வினையில் ஈடுபடுகின்றன. வினை விளைபொருளாக நிறைவுறா ஐதராக்சிலமீன் உருவாகிறது. 5 உறுப்பினர் வளைய இடைநிலை நிலையில் இம்முடிவு மாறுவதில்லை.

மூலக்கூற்றிடை கோப் வினை

மேற்கோள்கள்

தொகு
  1. Cope, Arthur C.; Ciganek, Engelbert (1963). "Methylenecyclohexane and N,N-Dimethylhydroxylamine Hydrochloride". Organic Syntheses 4: 612. doi:10.15227/orgsyn.039.0040. 
  2. March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
  3. Amine Oxides. VIII. Medium-sized Cyclic Olefins from Amine Oxides and Quaternary Ammonium Hydroxides Arthur C. Cope, Engelbert Ciganek, Charles F. Howell, Edward E. Schweizer J. Am. Chem. Soc., 1960, 82 (17), pp 4663–4669 எஆசு:10.1021/ja01502a053
  4. Amine Oxides. VII. The Thermal Decomposition of the N-Oxides of N-Methylazacycloalkanes Arthur C. Cope, Norman A. LeBel; J. Am. Chem. Soc.; 1960; 82(17); 4656-4662. எஆசு:10.1021/ja01502a052
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்_வினை&oldid=2749332" இலிருந்து மீள்விக்கப்பட்டது