கோமா பெரனிசியஸ்
கோமா பெரனிசியஸ் என்பது ஒரு விண்மீன் குழுவாகும். தற்போது வரை கண்டறியப்பட்ட 88 வகை விண்மீன் கூட்டங்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது. இது வட துருவத்தில் சிம்ம இராசி மண்டலத்தின் அருகே அமைந்துள்ளது. பெரனிசின் முடி என்று பொருள்படும் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட கிரேக்கச் சொல்லே இதன் பெயராகும். என்ற எகிப்து நாட்டின் ராணியாக இருந்த பெரனிஸ் என்பவளின் தலைமுடியாக இவ்விண்மீன் கூட்டம் கற்பனை செய்யப்பட்டுள்ளது. கிரேக்கத் தொன்மங்களின்படி எகிப்தில் கி.மு. 243 இல் நடந்த மூன்றாம் சிரியப் போரின் போது செலூசிட்ஸ் மன்னன் தாலமியின் சகோதரியை மணந்து அவளைக் கொன்றுவிடுகிறான். அவனை எதிர்த்துப் போர் புரியப் போகும் தன்னுடைய கணவரான தாலமி, போர்க்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பவேண்டும் என்று வேண்டிக் கொண்டு பெரனிஸ் தன் தலைமுடியைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றாள். ஆனால் அடுத்தநாள் காலையில் அத்தலைமுடி அங்கிருந்து மறைந்துவிடுகிறது. அரண்மனை சோதிடர் அத்தலைமுடியே வானில் நட்சத்திரமாக மாறிவிட்டது என உரைக்கிறார். அன்றிலிருந்து இவ்விண்மீன் கூட்டம் பெரனிசின் தலைமுடியாகச் சித்தரிக்கப்பட்டு அவ்வாறு அழைக்கப்படுகிறது.[1]
{{{name-ta}}} | |
விண்மீன் கூட்டம் | |
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள் | |
சுருக்கம் | Com |
---|---|
Genitive | Comae Berenices |
ஒலிப்பு | /ˈkoʊmə bɛrəˈnaɪsiːz/, genitive /ˈkoʊmiː/ |
அடையாளக் குறியீடு | the Berenice's Hair |
வல எழுச்சி கோணம் | 12.76 h |
நடுவரை விலக்கம் | +21.83° |
கால்வட்டம் | NQ3 |
பரப்பளவு | 386 sq. deg. (42nd) |
முக்கிய விண்மீன்கள் | 3 |
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு | 44 |
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 5 |
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 0 |
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 1 |
ஒளிமிகுந்த விண்மீன் | β Com (4.26m) |
மிக அருகிலுள்ள விண்மீண் | β Com (29.96 ly, 9.18 pc) |
Messier objects | 8 |
எரிகல் பொழிவு | Coma Berenicids |
அருகிலுள்ள விண்மீன் கூட்டங்கள் | Canes Venatici Ursa Major Leo Virgo Boötes |
Visible at latitudes between +90° and −70°. May மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |
மேற்கோள்
தொகு- ↑ Gaius Julius Hyginus (1875). "2.24". Astronomica.