கோரா துவோர்கின்
கோரா துவோர்கின் (Cora Dvorkin) ஓர் அர்ஜென்டீன இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியலாளரும் ஆர்வார்டு பல்கலைக்கழக இயற்பியல் துறை இணைப்பேராசிரியரும் ஆவார். இவரது ஆய்வுப் புலங்கள் கரும்பொருண்மத்தின் தன்மை, நொதுமியன்களும் பிற மெல்லெடைத் துகள்களும் தொடக்கநிலைப் புடவியின் இயற்பியலுமாகும். இவர் புதிதாக நிறுவிய செயற்கை அறிதிறனுக்கான நிறுவனத்துக்கும் அடிப்படை இடைவினைகள் வாரியத்துக்குமான ஆர்வார்டு பேராளர் ஆவார்.[1][2]
பேராசிரியர் கோரா துவோர்கின் Cora Dvorkin | |
---|---|
தேசியம் | அர்ஜென்டீனர் |
துறை | கோட்பாட்டு அண்டவியல் |
கல்வி | முனைவர், சிக்காகோ பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் (முனைவர்) புவெனோசு ஆரேசு பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) |
ஆய்வேடு | அண்ட நுண்ணலைப் பின்னணியில் புடவி உப்பலின் தடங்கள். (2011) |
ஆய்வு நெறியாளர் | பேரா. வேய்னே கூ |
இணையதளம் www |
இவர் 2019ஈல் அமெரிக்க ஆற்றல் துறையின் தொடக்கநிலை வாழ்க்கைப்பணி விருதைப் பெற்றுள்ளார். இவர் 2018 இல் அவ்வாண்டின் அறிவியலாளராக ஆர்வார்டு அறக்கட்டளையால் "இயற்பியல், அண்டவியல், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் புலங்களில் கல்விப்பணி ஆற்றிய பங்களிப்புகளூக்காக" அறிவிக்கப்பட்டார்.[3] இவருக்கு இராடிக்ளிப் நிறுவன ஆய்வுநல்கையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இராடிக்ளிப் நிறுவனத்தின் சுட்சர் பேராசிரியத் தகைமையும் தரப்பட்டது. இவர் 2020 இல் TEDx இன் கருத்தரங்கின் இரியோ தெ லா பிளாட்டா நிகழ்ச்சியில் கரும்பொருண்மத் தேடல் சார்ந்த எந்திரம் கற்றல் பற்றி ஓர் உரையாற்றியுள்ளார்.[4]
இளமையும் கல்வியும்
தொகுஇவர் அர்ஜென்டீனாவில் புவெனோசு ஆரேசுவில் பிறந்து வளர்ந்தார்.[5] இவர் புவெனோசு ஆரேசு பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியலில் பட்டயத்தை சிறப்புத் தகமையுடன் பெற்றார். இவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் தன் மேற்படிப்புக்காகச் சேர்ந்து 2011 இல் இயற்பியல் துறையில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார், இங்கு இவர் "சிட்னி புளூமெந்தல் ஆய்வுத் தகைமையை" இவரது "நிகரற்ற ஆராய்ச்சிச் செயல்திறமைக்காக" பெற்றார்.[6] இவர் 2011 முதல் 2014 வரைபிரின்சுட்டன் உயராய்வு மையத்தில் இயற்கை அறிவியல் பள்ளியிலும் 2014 முதல் 2013 வரை ஆர்வார்டு சுமித்சோனியன் வானியற்பியல் மையக் கோட்பாட்டு, கணிப்பு. நிறுவனத்திலும் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அபுள் ஆய்வுறுப்பினராகவும் உயராய்வு மைய ஆய்வுறுப்பினராகவும் இருந்துள்ளார்.
வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும்
தொகுஇவர் 2015 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் புல உறுப்பினராகச் சேர்ந்தார் .இவர் தன் ஆய்வில் கரும்பொருண்மப் பகுதியைப் புரிந்துகொள்ள அண்ட நுண்ணலைப் பின்னணி நோக்கீடுகளையும் ஈர்ப்பு வில்லையாக்கத்தையும் புடவியின் பேரியல் கட்டமைப்பையும் பயன்படுத்துகிறார்.[7]
கரும்பொருண்மத்தை ஆய்வதில் பல நெடுக்க நோக்கீட்டு ஆய்கலங்களை பயன்படுத்தி குறிப்பிடத் தகுந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
இவர் அறிவியலில் சிறுபான்மையருக்கும் மகளிருக்குமான உரிமைகளுக்காக போராடுகிறார்.
தகைமைகளும் விருதுகளும்
தொகுதொடக்கநிலை வாழ்க்கைப்பணி விருது, அமெரிக்க ஆற்றல் துறை, 2019 [8]
- 2018 ஆம் ஆண்டின் ஆர்வார்டு அறிவியலாளர், ஆர்வார்டு அறக்கட்டளை[9]
- 2018ஆம் ஆண்டு இராடிக்ளிப் நிறுவன ஆய்வுநல்கையும் சுட்சர் பேராசிரியத் தகைமையும்[10]
- 2014 ஆம் ஆண்டு காவ்லிஅறிவியல் முன்னணி ஆய்வுத்தகைமை,[11] அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகமும் காவ்லி அறக்கட்டளையும்
- 2014-2017 அபுள் ஆய்வுத்தகைமை, நாசா[12]
- 2014-2017 உயராய்வு நிறுவனம், ஆய்வுத்தகைமை, ஆர்வார்டு பல்கலைக்கழகம் [13]
- 2012 மார்ட்டின், பெத்தே கூட்டு விருது, மிகச் சிறந்த இயற்பியலாளருக்கான விருது, ஆசுபென் இயற்பியல் மையம்[14]
- 2009 "சிட்னி புளூமெந்தல் ஆய்வுத் தகைமை", "outstanding performance in research", சிக்காகோ பல்கலைக்கழக இயற்பியல் துறை
மேற்கோள்கள்
தொகு- ↑ "AI Institute". dvorkin.physics.harvard.edu.
- ↑ "National Science Foundation awards $20M to launch artificial-intelligence institute". www.seas.harvard.edu.
- ↑ "Physics Prof. Dvorkin Named 2018 Harvard Scientist of the Year | News | The Harvard Crimson". www.thecrimson.com.
- ↑ Inteligencia artificial y la materia oscura del universo | Cora Dvorkin | TEDxRiodelaPlata (in ஆங்கிலம்)
- ↑ "Cora Dvorkin". www.physics.harvard.edu (in ஆங்கிலம்).
- ↑ "Cora Dvorkin". www.physics.harvard.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
- ↑ Boyle, Rebecca. "The Cosmologist Who Dreams in the Universe's Dark Threads". Quanta Magazine (in ஆங்கிலம்).
- ↑ "Two faculty receive Early Career Research funding from DOE". Harvard Gazette (in அமெரிக்க ஆங்கிலம்).
- ↑ "Cora Dvorkin named 2018 Harvard Scientist of the Year". itc.cfa.harvard.edu (in ஆங்கிலம்).
- ↑ "Cora Dvorkin". Radcliffe Institute for Advanced Study at Harvard University (in ஆங்கிலம்).
- ↑ "Kavli Frontiers of Science".
- ↑ "NASA Hubble Fellowship".
- ↑ "ITC Fellowship".
- ↑ "Martin and Beate Block Award".