கோரிங்கு தாக்குதல்

சதுரங்கத் திறப்புகள்

கோரிங்கு தாக்குதல் (Göring Attack) என்ற சதுரங்க திறப்பு ஆட்டம் பின் வரும் நகர்வுகளுடன் தொடங்குவதாக அடையாளப்படுத்தப்படுகிறது. இவான்சு பலியாட்ட சதுரங்க திறப்பு ஆட்டத்தின் போது இந்நகர்வுகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
b6 black bishop
d6 black pawn
a5 black knight
g5 white bishop
c4 white bishop
d4 white pawn
e4 white pawn
c3 white knight
f3 white knight
a2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
d1 white queen
f1 white rook
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கோரிங்கு தாக்குதல் (10.Bg5)
1.e4 e5
2.Nf3 Nc6
3.Bc4 Bc5
4.b4 Bxb4
5.c3 Bc5
6.0-0 d6
7.d4 exd4
8.cxd4 Bb6
9.Nc3 Na5
10.Bg5

இவான்சு பலியாட்ட சதுரங்க திறப்பு ஆட்டத்தில் வெள்ளை சிப்பாயின் (4.b4) ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் (4...Bxb4) பதிலுரையில் வெள்ளையின் (5.c3) நகர்வு கருப்பை (5...Bc5) என்ற தற்காப்பு நகர்வுக்குத் தூண்டுகிறது. இத்தற்காப்பு நகர்வு மிகவும் பிரபலமான பின்வாங்கல் நகர்வாகும். ஆட்டம் 10.Bg5, என்ற கோரிங்கு தாக்குதல் அடையாள நகர்வு வரை தொடர்கிறது. 1869 ஆம் ஆண்டில் காரல் தியோடர் கோரிங்கு என்பவர் யோகன்னெசு மிங்க்விட்சுக்கு எதிராக பல ஆட்டங்களை ஆடியுள்ளார். இவர் பெயரே இத்திறப்பிற்குரிய பெயராக சூட்டப்பட்டது. மிக்கேல் டிச்கோரின் 1883 ஆம் ஆண்டில் சிடெயினிட்சுக்கு எதிராக இந்த கோரிங்கு தாக்குதல் சதுரங்கத் திறப்பு ஆட்டத்தை விளையாடிய பின்னர்தான் இது நடைமுறைக்கு வந்தது. இந்த திறப்பில் தொடங்கிய பல்வேறு ஆட்டங்களில் டிச்கோரின் திறமையான பல வெற்றிகளை அடைந்திருக்கிறார்[1]. நவீன சதுரங்க திறப்பு என்ற புத்தகம் கோரிங்கு தாக்குதல் சதுரங்க திறப்பை ஒரு தந்திரமான திறப்பு என்று வரையறுக்கிறது. சரியான நகர்வுகள் தெரிந்தால் மட்டுமே இத்திறப்பை விளையாட வேண்டும்[2].

மேற்கோள்கள் தொகு

  1. Notes ஒடாகோ chess club (recording Brunn v Troppan game).
  2. MCO,13th Ed. Nick De Firmian, Barnes & Noble

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரிங்கு_தாக்குதல்&oldid=2915404" இலிருந்து மீள்விக்கப்பட்டது