கோரி-பாலிங் விதிகள்

உயிர் வேதியியலில் புரதங்களின் இரண்டாம் நிலை தன்மையை, குறிப்பாக, CO-NH பெப்டைடு இணைப்பைக் கட்டுப்

கோரி-பாலிங் விதிகள் (Corey-Pauling rules) என்பவை உயிர் வேதியியலில் புரதங்களின் இரண்டாம் நிலை தன்மையை, குறிப்பாக, CO-NH பெப்டைடு இணைப்பைக் கட்டுப்படுத்தும் மூன்று அடிப்படை அறிக்கைகளின் தொகுப்பாகும். முதன் முதலில் ராபர்ட் கோரி மற்றும் லினசு பாலிங் ஆகியோரால் முன்மொழியப்பட்டது.[1]

இவ்விதிகள் பின்வருமாறு:

பெப்டைடு இணைப்பில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரே தளத்தில் உள்ளன.

ஐதரசன் பிணைப்பில் உள்ள நைட்ரசன், ஐதரசன் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் தோராயமாக நேர்கோட்டில் இருக்கும்.

கார்பன்-ஆக்சிசன் மற்றும் நைட்ரசன்-ஐதரசன் குழுக்கள் அனைத்தும் பிணைப்பில் ஈடுபட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. John Daintith, தொகுப்பாசிரியர் (2008). A Dictionary of Chemistry (6th ). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199204632. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரி-பாலிங்_விதிகள்&oldid=3393169" இலிருந்து மீள்விக்கப்பட்டது