கோரோ என்பது பிஜி நாட்டுக்குச் சொந்தமான தீவு. இது எரிமலைகளைக் கொண்டுள்ளது. லோமாய்விட்டி தீவுக்கூட்டத்தில் உள்ளது. அருகிலுள்ள கடலுக்கு, இதன் நினைவாக கோரோ கடல் எனப் பெயரிட்டிருக்கின்றனர். இதன் பரப்பளவு 108.9 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். பிஜியின் பெரிய தீவுகளில் இதுவும் ஒன்று. இங்குள்ள 14 ஊர்களில், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரோ_தீவு&oldid=3455890" இலிருந்து மீள்விக்கப்பட்டது