கோல்டன் இயர்ஸ் (2017 திரைப்படம்)

திரைப்படம் 2017

கோல்டன் இயர்ஸ் (Golden Years (பிரெஞ்சு மொழி: Nos années folles) என்பது  2017 ஆண்டு வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும். இதை ஆண்ட்ரே டெக்கினே இயக்கியுள்ளார். இது 2017 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் பிரிவில் காட்டப்பட்டது.[1]

கோல்டன் இயர்ஸ்
கதைஆண்ட்ரே டெக்கினே
நடிப்புபியர் டெலாடான்சாம்ப்ஸ்
வெளியீடு22 மே 2017 (2017-05-22)(Cannes)
13 செப்டம்பர் 2017 (France)
ஓட்டம்103 நிமிடங்கள்
நாடுபிரான்சு
மொழிபிரெஞ்சு

கதை தொகு

இந்தப்படம் முதல் உலகப் போரிலிருந்து தப்பிவந்த வீரன் பாலின் உண்மைக் கதை ஆகும். போரில் இருந்து தப்பிவந்த இராணுவ வீரன் என்ற கணவனது அடையாளத்தை மறைக்க, அவனுடைய மனைவி லூயி, பாலுக்குப் பெண் வேடமிடுகிறாள். பாரிஸில் சூஸன் என்ற பெயரில் ஒரு பெண்ணைப் போல் நடமாடுகிறான் பால். போர் முடிந்ததும், சூஸன் மீண்டும் பால் என்ற தன் உண்மையான அடையாளத்தைப் பெற முயற்சி மேற்கொள்கிறான். இப்படி மறைந்து வாழ்பவர்களின் வேடம் கலையும்போது எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை இந்தப் படம் நகைச்சுவையாகப் பேசுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Steve Pond (27 April 2017). "Cannes Film Festival Adds Roman Polanski Film to Lineup". The Wrap. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.

வெளி இணைப்புகள் தொகு